தென்காசி புதிய கலெக்டர் ஏ.கே.கமல்கிஷோர்!

தென்காசி மாவட்டத்தின் புதிய கலெக்டராக ஏ.கே. கமல் கிஷோர் ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்க உள்ளார். கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கலெக்டராக பணியாற்றி வந்த துரை ரவிச்சந்திரனுக்கு பதிலாக ஏ.கே.கமல் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தென்காசி மாவட்டத்தின் 6வது கலெக்டர் ஆவார். 

ஏ.கே. கமல் கிஷோர், கேரளாவைச் சேர்ந்தவர். கேரள மாநிலம் கொச்சி மாடல் என்ஜினியரிங் காலேஜ்ல பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். 2015ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, உத்தர்காண்ட் மாநிலம் முசோரியில் உள்ளா லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் பயிற்சி பெற்றவர்.

2019ம் ஆண்டும் நாகப்பட்டினம் சப்-கலெக்டராக பொறுபேற்ற ஏ.கே.கமல் கிஷோர், திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரா பணியாற்றியுள்ளார். அதன்பிறகு,  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட இவர், தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். 

தற்போது, தென்காசி ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக பணியாற்றி, ஏராளமான மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்தி வெற்றி பெற்றவர். 

இதுதவிர, சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க அமைக்கப் பட்ட குழுவிலும் இடம்பெற்று புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மேலும், 2022 ஆண்டு மார்ச் மாதம்  உக்ரைன் போரின்போது, அங்கு சிக்கியிருந்த தமிழக மாணவர்களை மீட்பதற்காக அறிவிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுவிலும்  இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு துறைகளில் திறம்பட செயல்பட்ட ஏ.கே.கமல் கிஷோர் ஐ.ஏ.எஸ்., அவர்களை தென்காசி மாவட்டத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu