பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் சிம்பியாசிஸ் இண்டர்நேஷனல்

சிம்பியாசிஸ் இண்டர்நேஷன் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) SET - General (Symbiosis Entrance Test), SET - Law, Symbiosis Law Admission Test (SLAT), and the Symbiosis Institute of Technology Engineering Entrance Exam (SITEEE) உள்ளிட்ட தனது பல்வேறு பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதிகளை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 76 நகரங்களில் நடைபெறும் Computer Based Test (CBT) விருப்பமுள்ள மாணவர்கள் சம்மந்தப்பட்ட தேர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ பதிவு இணைப்பு மூலம் ஒவ்வொரு தேர்வு குறித்த விரிவான தகவல்களுடன் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

SET - General (Symbiosis Entrance Test): சிம்பியாசிஸ் இண்டர்நேஷனல் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) SET 2024 பதிவு செய்முறை 2023 டிசம்பர் 13 அன்று தொடங்கியது. விண்ணப்ப நுழைவாயில் அடுத்த நான்கு மாதங்களுக்குத் திறந்திருப்பதால், விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைனில் 2024 ஏப்ரல் 12 வரை விண்ணப்பிக்கலாம். SET 2024 மே 5 (ஞாயிறு) மற்றும் மே 11 (சனிக்கிழமை) தேதிகளில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்புர்வ வலைதளமான www.set-test.org/ <https://www.set-test.org/?utm_source=PR&utm_medium=article> பதிவு செய்யலாம்.

SET 2024 மூலம் விண்ணப்பிக்கும் பாடத் திட்டங்கள்:
  • B.B.A. - Honours / Honours with Research
  • B.C.A (Honours / Honours with Research)
  • B.B.A (Information Technology) - Honours /Honours with Research
  • B.A. (Mass Communication) - Honours / Honours with Research
  • B.Sc. (Economics)-Honours / Honours with Research
  • B.Sc. (Applied Statistics and Data Science) - Honours / Honours with Research

Symbiosis Law Admission Test (SLAT):

Symbiosis Law Admission Test (SLAT) 2024 அல்லது SLT 2024 CBT முறையில் 2024 மே 5 (ஞாயிறு) மற்றும் மே 11 (சனிக்கிழமை) தேதிகளில்  SLAT 2024 தேர்வு மையங்களில் நடைபெறும்.  இதற்காகப், பூனே, நொய்டா, ஐதராபாத், நாக்பூர் நகரங்களிலுள்ள அனைத்து சிம்பியாசிஸ் சட்டப் பள்ளிகளிலும் (SLS), சிம்பியாசிஸ் தேர்வு செயலகம் எஸ்எல்ஏடி 2024 விண்ணப்ப செய்முறையை 2023 டிசம்பர் 13 அன்று தொடங்கியது.  கீழ்க்காணும் பட்டப் படிப்புகளைப் படிக்க விரும்புவோர் எங்கள் அதிகாரப்பூர்வ வலைதளமான <https://www.set-test.org/?utm_source=PR&utm_medium=article> செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் பாடத் திட்டங்கள்:
  • B.A LL. B (Hons)
  • B.B.A LL. B (Hons)
  • B.A LL. B.
  • B.B.A LL. B

SET - Engineering Entrance Exam (SITEEE):

SITEEE 2024 விண்ணப்ப செய்முறை ஆன்லைன் மூலம் 2024 மே 5 (தேர்வு 1) மற்றும் 2024 மே 11 (தேர்வு 2) தேதிகளில் ஏராளமான பிடெக் பாடத் திட்டங்களுக்கு நடைபெற உள்ளது. SITEEE 2024 தேர்வு எழுத விருப்பமுள்ளோர் அதிகாரப்பூர்வ வலைதளம் <https://www.set-test.org/?utm_source=PR&utm_medium=article> மூலம் கடைசி நாளான 2024 ஏப்ரல் 12க்குள் விண்ணப்பங்களை நிறைவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் பாடத் திட்டங்கள்:
  • Bachelor of Technology (Artificial Intelligence and Machine Learning)
  • Bachelor of Technology (Civil Engineering)
  • Bachelor of Technology (Computer Science and Engineering)
  • Bachelor of Technology (Electronics and Telecommunication)
  • Bachelor of Technology (Mechanical Engineering)
  • Bachelor of Technology (Robotics and Automation)
சிம்பியாசிஸ் இண்டர்நேஷனல் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)(SIU) நொய்டா, ஐதராபாத், நாக்பூர் மற்றும் பெங்களூரு எனப் பல்வேறு மாநிலங்களிலும், நகரங்களிலும் உள்ளது.  அனைத்து வளாகங்களிலும் ‘தரமான கல்வி மூலம் பன்னாட்டுப் புரிதலை மேம்படுத்துவது’ என்னும் தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கி உள்ளது. இந்தியக் கலாச்சரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தும் பல்வகைப் பன்னாட்டு மாணவர்களை ஈர்க்கும் உற்சாகமான சமூகங்களாகச் செயல்படுகின்றன.

யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வகை1 அந்தஸ்து மற்றும் தேசிய மதிப்பீடு & அங்கீகார அமைப்பின் (என்ஏஏசி) ஏ+++ கிரேட் அங்கீகாரம் பெற்ற சிம்பியாசிஸ் இண்டர்நேஷனல் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கல்வித் துறைக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  எஸ்இடி நுழைவுத் தேர்வுகள் மூலம் இளங்கலைப் பாடத் திட்டங்களை மேம்படுத்தவும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தக்க கல்வி பயணத்தை அனுபவிக்கவும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு : <https://www.set-test.org/?utm_source=PR&utm_medium=article>

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu