மஹிந்திரா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது இருப்பை வலுப்படுத்துகிறது

கடந்த 4 ஆண்டுகளாக வலுவான அளவு வளர்ச்சியை அடைந்த நிலையில், மஹிந்திரா வின் டிரக் மற்றும் பஸ் வணிகப் பிரிவு, தமிழ்நாட்டின் சென்னையில் அதிநவீன 3எஸ் (விற்பனை, சேவை, உதிரிபாகங்கள்)  டீலர்ஷிப் ஐ திறந்தது. 12 சர்வீஸ் பே க்களைக் கொண்ட இந்த வசதியானது, ஓட்டுநர்களுக்கான தங்குமிட வசதி, 24 மணி நேர பிரேக் டவுன் உதவி மற்றும் அட்புளூ கிடைக்கும் வசதி ஆகியவற்றை வழங்குவதுடன் ஒரு நாளைக்கு 15-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு சர்வீஸ் செய்ய முடியும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மஹிந்திரா குழுமத்தின் குழு நிர்வாகக் குழு உறுப்பினரும், எஸ்எம்எல் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அட்வான்ஸ்டு டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரும் மற்றும் மஹிந்திரா ஏரோஸ்பேஸ், டிரக்ஸ் அண்ட்  பஸ்சஸ் பிரிவின் தலைவருமான வினோத் சஹாய் கூறுகையில், "சென்னையில் ஸ்ரீ செல்வி மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து எங்களது புதிய, நவீன வசதிகளுடன் கூடிய டீலர்ஷிப்பைத் திறந்து வைப்பதில்  மகிழ்ச்சி அடைகிறோம். மஹிந்திரா டிரக்ஸ் அண்ட்  பஸ்சஸ்  மற்றும் எஸ்எம்எல் ஆகியவை இப்போது இணைந்து, எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வாடிக்கையாளர் பராமரிப்பை  வழங்குகின்ற,  நாடு முழுவதும் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கான 200-க்கும் மேற்பட்ட 3எஸ் டீலர்ஷிப்புகளையும், 400-க்கும் மேற்பட்ட இரண்டாம் நிலை சேவை மையங்களையும் கொண்டுள்ளன. டிரக்குகள் மற்றும் பேருந்துகளில் கிட்டத்தட்ட 7% சந்தைப் பங்கைக் கொண்ட மஹிந்திரா குழுமம், தற்போது ஐ மற்றும் எல்சிவி பேருந்துகளில் 24% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. 2031 நிதியாண்டிற்குள் எங்கள் சந்தைப் பங்கை 10 முதல் 12% ஆகவும், 2036 நிதியாண்டிற்குள் 20%க்கும் மேலாகவும் உயர்த்த நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்."என்று கூறினார்.

எஸ்எம்எல் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, மஹிந்திரா டிரக்ஸ் அண்ட்  பஸ்சஸ் & கன்ஸ்ட்ரக்ஷன் ஈகுப்மென்ட் பிரிவின் வணிகத் தலைவர் டாக்டர் வெங்கட் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், “வாடிக்கையாளர் மைய அணுகுமுறையின் மீதான எங்கள் பேரார்வம், எங்கள் வாடிக்கையாளர்களுக்காகப் புரட்சிகரமான மதிப்புமிக்க திட்டங்களை உருவாக்குவதை நோக்கி எங்களைத் தூண்டியுள்ளது.  எங்களது முழு தயாரிப்பு வரம்பிலும் உத்தரவாதமான அதிக மைலேஜ் என்பதாகட்டும்,  வாகன உரிமையாளர்களுக்கு  தங்கள் போக்குவரத்து வணிகத்தின் மீது முழுக் கட்டுப்பாட்டை வழங்கும் மிக நவீன டெலிமேடிக்ஸ்  தீர்வான ஐமாக்ஸ் என்பதாகட்டும், அல்லது விற்பனை நிலையங்களின் விரைவாக வளரும் வலையமைப்பு மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு  சாதனங்கள் வடிவமைப்புகள் என்பதாகட்டும், இந்திய வணிக வாகனத் துறையில் மிகச்சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க நாங்கள் உறுதிப்பாட்டுடன் உள்ளோம்.” என்று கூறினார்.

மஹிந்திரா பளாசோ எக்ஸ் ஃபுரியோ, ஆப்டிமோ மற்றும் ஜாயோ ஆகியவை இந்தியாவில் இரட்டை சேவை உத்தரவாதங்களுடன் ஆதரிக்கப்படும் ஒரே வணிக வாகன வரம்பாகும். இந்த வாக்குறுதியின் கீழ், வாகனங்கள் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் இயக்கத்திற்கு வர உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, இல்லையெனில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,000 இழப்பீடு வழங்கப்படும். கூடுதலாக, அங்கீகரிக்கப்பட்ட டீலர் பணிமனைகளில் 36 மணி நேர உத்தரவாத திருப்பி அளிக்கும் நேரம் உறுதி செய்யப்படுகிறது, எந்தவொரு தாமதம் ஏற்பட்டாலும் ஒரு நாளைக்கு ரூ.3,000 இழப்பீடு வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu