ரூ.8249க்கு அறிமுகமாகும் மோட்டோ ஜி24 ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா,  அதன்  g சீரீஸ் ஃப்ரான்ச்சைஸ் வரிசையில்  சமீபத்திய அடிப்படை-தொடக்க நிலை ஸ்மார்ட்ஃபோன் moto g24 power ஐ அறிமுகப்படுத்தப்படுவதை அறிவித்தது. பிரீமியம் வடிவமைப்பு, ஆற்றல் மிக்க பிரமாண்டமான  6000 mAh பேட்டரி டர்போபவர்™ 33W சார்ஜர் ஆகிய சிறப்பம்சங்களுடன் மிகக் குறைந்த விலையில் இந்தப் பிரிவிலேயே முன்னணி வகிக்கும் ஒன்றாக திகழ்கிறது. ஈடு இணையில்லாத மற்றும் நீடித்த நிலையான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்யும் இந்தக் கருவி  g சீரீஸ் ஃப்ரான்ச்சைஸ் வரிசையில்  கூடுதலாக சேர்க்கப்பட்ட தனித்துவமான ஒன்றாக அமைந்துள்ளது. மனதைக் கவர்ந்திழுக்கும் 3டி  அக்ரிலிக் கிளாஸ் (PMMA) ஃபினிஷூடன் இந்தப் பிரிவிலேயே மிகவும் மெலிதான மற்றும் மிகக் குறைந்த எடையுடனான moto g24 power ஃபோன் தன்னகத்தே ஆற்றல் மிக்க 6000mAh பேட்டரியை கொண்டதாகும்.   புத்தம்புதிய  ஆண்ட்ராய்டு™ 14 இயங்கு தளத்துடன் கூடிய இந்த ஃபோன், பல்வேறு ஒளி நிலைகளில் ஈடுஇணையில்லாத வகையில் காட்சிகளை  துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்ட இந்தப் பிரிவிலேயே தலைசிறந்த 16MP செல்ஃபி கேமிராவின் ஆதரவுடனான ஒரு   மேம்பட்ட 50MP  குவாட் பிக்சல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

சீராக ஒழுங்கமைக்கப்பட்ட உள்ளக கேமராவுடனான moto g24 power இன் பிரீமியம் வடிவமைப்பு,  இந்தக் கருவியின்  ஒட்டுமொத்த அழகியலையும் மேம்படச்செய்கிறது.  மற்றும் பயனர்கள் பிடித்துக் கொள்ள வசதியாக கைக்கடக்கமாகவும் பார்வைக்கு மனதை மயக்கும் தோற்றத்தையும்  இந்த ஸ்மார்ட்ஃபோன் வழங்குகிறது. இதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ரீடர்  கருவியை எளிதாகவும்  மற்றும் பாதுகாப்பாகவும் திறப்பதற்கு உதவுவதோடு   அதன் மெலிதான மற்றும் வலுவான வடிவமைப்புக்கு ஒரு நிறைவான தோற்றத்தை அளிக்கிறது. மிகக் குறைந்த  8.99 மிமீ தடிமன் அளவும்  மற்றும் 197 கிராம் எடையும் மட்டுமே கொண்ட , இந்த மென்மையான  பளபளப்பான ஸ்மார்ட்போன் நீர்-எதிர்ப்புத் திறன் கொண்ட வடிவமைப்பு IP 52 மதிப்பீட்டளவுடன் வருகிறது மற்றும் மேலும் இரண்டு அதிர்ச்சியூட்டும் மற்றும் இங்க் ப்ளூ மற்றும் கிளேசியர் ப்ளூ ஆகிய இரு கண்ணைக் கவரும் அழகிய வண்ணங்களில்  கிடைக்கிறது.

பயனர்கள் தங்கள் மனதுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளை கண்டு களிக்கவும், கேம்களை விளையாடவும் மற்றும் வீடியோ அழைப்புக்களில்  நீண்ட நேரம் தொடர்ந்து அனுபவித்து ஆழ்ந்துபோகவும் உதவும் வகையில் ஒரு ஆற்றல்மிக்க பிரமாண்டமான 6000mAh பேட்டரியை  இந்த moto g24 power ஃபோன் கொண்டுள்ளது. TurboPower™ 33W சார்ஜரின் உதவியுடன், அதிவிராக சார்ஜ் செய்யப்பட்டுவிடுகிறது  மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தாலே கிட்டத்தட்ட வார இறுதி நாட்கள் முழுவதும் இடைவிடாத ஒரு நீண்ட நீடித்த பொழுதுப்போக்கு அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.  

மேலும், moto g24 power ஃபோன் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு™ 14 இயங்குதளத்துடன் பாதுகாப்பு புத்தாக்கங்களுக்கு 3 வருட உத்திரவாதத்துடன்  வருகிறது. மேலும் இதிலுள்ள     ஃப்ளாஷ் நோட்டிஃபிகேஷன் போன்ற பல்வேறு தனித்துவமான அனுபவங்களையும் வழங்குகிறது.;  அழைப்புக்கள் வரும்போது  ஃபிளாஷ் மற்றும் ஸ்கிரீன் லைட்டை இயங்கச் செய்து பயனர்கள் எந்த ஒரு முன்னறிவிப்புக்களையும் தவறவிடாமல் கவனிக்க உதவுகிறது. பயனர்கள் தனியுரிமைக் கட்டுப்பாட்டுடன் தங்கள் சுகாதாரத் தரவுகளை ஒரே இடத்தில் நிர்வகிக்க இதன் ஹெல்த் கனெக்ட் அம்சம் உதவுகிறது. மேலும், மேம்படுத்தப்பட்ட உருப்பெருக்கவசதி , தரவு பகிர்வு புத்தாக்கங்கள்  மற்றும் மேம்படுத்தப்பட்ட PIN  பாதுகாப்பு போன்ற குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்களையும் உள்ளடக்கியது.

moto g24 power மேம்பட்ட 50 MP குவாட் பிக்சல் கேமரா அமைப்புக்கு  ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த க்வாட் பிக்ஸல் தொழில்நுட்பம் மூலம், பகல் அல்லது இரவுப் பொழுதில் குறைந்த ஒளியில் துல்லியமான, உயிர்த் துடிப்போடு கூடிய புகைப்படங்களைக் காட்சிப்படுத்தும்  வகையில் 4x மேம்பட்ட திறனை பயனர்கள் பெறுவார்கள். அத்துடன் கூடுதலாக, இதன் தனிப்பயனாக்க மேக்ரோ விஷன் கேமரா பயனர்களை அவர்களின் குறியிலக்குக்கு மிக அருகாமையில் 4 செமீ இடைவெளிக்குள் நெருங்கி வந்து வழக்கமான லென்ஸ் மூலம் சிறு சிறு விவரங்களை துல்லியமாக காட்சிப்படுத்த உதவுகிறது. இந்தப் பிரிவிலேயே தலைசிறந்த 16 MP திறன் கொண்ட முன்புறக் கேமிராவை இந்த ஸ்மார்ட்ஃபோன் கொண்டுள்ளது. இதன் மூலம் கண் இமைக்கும் நேரத்தில் தெளிவான துல்லியமான செல்ஃபிகளை பிடிக்க  முடியும். மேலும், ஆட்டோ நைட் விஷன், HDR மற்றும் போர்ட்ரெய்ட் மோட்  போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் மென்பொருள்களுடன் இது வருகிறது.

மோட்டோ ஜி24 பவர் ஃபோன் அதன் நாட்ச்லெஸ் 6.6" 90 Hz IPS LCD display திரை காரணமாக உட்சபட்சமாக 537 NITS பிரகாசத்தை அளித்து நம்பமுடியாத பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது. மேலும், உயரிய அளவில் 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன், ஆப்ஸ் மற்றும் இணையதளங்களுக்கு இடையே ஸ்க்ரோலிங் செய்வது மாறுவது போன்ற செயல்பாடுகளை தடையில்லாமல் மென்மையாகவும் எளிதாகவும் மேற்கொள்ளமுடியும். ஆட்டோ மோட் இயக்கத்தில், திரையின் புதுப்பிப்பு வீதம் 90 Hz மற்றும் 60 Hz க்கு இடையே இயல்பாக நெகிழ்வாக மாறிக்கொள்வதன் மூலம் ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த பேட்டரி செயல்திறனை மேம்படச்செய்கிறது.  இந்த ஆழ்ந்து போகச்செய்யும்  காட்சி அனுபவமானது அதிக ஒலி நிலைகளில் மேம்பட்ட அடித் தொனி மற்றும் தெளிவான குரல் ஒலியுடன் கூடிய உயர்தர இசையொலியை  வழங்கும்  டால்பி அட்மோஸ்® ஸ்டீரியோ ஸ்பீக்கர்களால் மேலும் மேம்படுத்தப்படுகிறது.

இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த. மொபைல் பிசினஸ் குரூப்-இந்தியாவின் நிர்வாக இயக்குநர் நரசிம்மன் கூறியதாவது , "எங்கள் g சீரீஸ் ஃப்ரான்ச்சைஸ் வரிசையில்  சமீபத்திய சேர்க்கையான  - moto g24 power இன் அறிமுகம் குறித்து அறிவிப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மூலம், இந்திய மொபைல் போன் நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மேம்பட்ட சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை  மலிவு விலையில்  வழங்கி மக்கள் அனைவரும் பாகுபாடில்லாமல் அந்த அனுபவத்தை பெற நாங்கள் உதவுகிறோம்.  . பிரீமியம் வடிவமைப்பு மற்றும் ஒரு மிகப்பெரிய  பேட்டரி மற்றும் இதர பல தலைசிறந்த சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் மிகவும் எளிதாக  அணுகக்கூடிய விலையில் அதிநவீன மற்றும் செயல்திறன் மிக்க அனுபவத்தை  தடையின்றி பெற்று மகிழ,  உதவுகிறது.”  

கூடுதலாக, moto g24 power இரு வேறு  RAM வகைகள் மூலம்  மேம்பட்ட செயல்திறனை பயனர்களுக்கு வழங்குகிறது, குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், RAM பூஸ்ட் அம்சத்துடன் 16ஜிபி வரை விரிவாக்கிக்கொள்ளக்கூடிய  உள்ளமைந்த  4GB or 8GB LPDDR4X RAM. மேலும் இதன் உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜ் வசதி மூலம் 128GB வரையிலான  புகைப்படங்கள், திரைப்படங்கள், பாடல்கள், ஆப்ஸ் மற்றும் கேம்களை சேமித்துவைக்க  போதுமான இடத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. தனிப்பட்ட மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி 1TB வரை சேமிப்பகத்தை  விரிவாக்கும் வசதிமூலம் பயனர்கள் பயனடையலாம்.

இருப்பு :
The moto g24 power இரண்டு அழகான வண்ணங்களில் கிடைக்கும். :  3D அக்ரிலிக் கிளாஸ் (PMMA) ஃபினிஷ் அம்சத்துடன் இங்க் ப்ளூ மற்றும் கிளேசியர் ப்ளூ moto g24 power  4GB RAM மற்றும் 8GB RAM + 128GB  உள்ளக சேமிப்பகத்துடன்  இரு வேறு நினைவக வகைகளில் கிடைக்கும்; ஃப்ளிப்கார்ட் Motorola.in மற்றும் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் 7 பிப்ரவரி 2024, அன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.
 
அறிமுக விலை :
  • 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் : ரூ. 8,999
  • 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் : ரூ. 9,999
  • மலிவு விலை சலுகைகள்~:
  • எக்ஸ்சேஞ்ச் இன் போது கூடுதலாக ரூ.  750 தள்ளுபடி.

சலுகைகளுடனான இறுதி விலை :
  • 4GB + 128GB: ரூ. 8,249
  • 8GB + 128GB:  ரூ.  9,249
 
ஆபரேட்டர் சலுகைகள் :
  •  ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 4,500 பெறுமான மொத்த பலன்கள். (ரூ. 399 க்கான ப்ரீ பெய்ட் திட்டங்களுக்கு மட்டும் பொருந்தும்) )
  • - ரொக்கச்சலுகை ரூ . 2000
  • - ரூ. 2500பெறுமான பார்னர் கூப்பன்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu