ரூ.22,999க்கு அறிமுகமாகும் மோட்டோ எட்ஜ் 40 நியோ

இந்தியாவின் மிகச்சிறந்த## 5ஜி ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா மற்றும் உலகளாவிய அளவில் வண்ணங்களுக்கு அதிகாரபூர்வ மையமான PANTONE™ இரு நிறுவனங்களும், பேன்டோன் கலர் ஆஃப் தி இயர்  வண்ணங்களில் கருவிகளை உருவாக்கும் முயற்சியில்   தொடர்ந்து இரண்டாவது  ஆண்டாக ஒன்றிணைந்திருக்கிறார்கள். மோட்டோரோலா, அர்த்தமுள்ள புத்தாக்கங்கள் மூலம் மக்களின் வாழ்வை வளம்பெறச்செய்வதோடு, வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் மாறுபட்ட தோற்றத்தை வழங்கும் தனது உறுதிப்பாட்டிற்கு இணங்க PANTONE™ நிறுவனத்துடன் தொடர்ந்து பல ஆண்டுகளாக தனிப்பட்ட கூட்டாண்மையை கொண்டிருக்கும் முதல் முதலான மற்றும்  ஒரே ஸ்மார்ட்போன் பிராண்டாகும்,

இந்த ஆண்டுக்கான வண்ணமாக PANTONE™ 13-1023 பீச் ஃபஸ் ஐ தேர்ந்தெடுத்த பேன்டோன் கலர் ஆஃப் தி இயர் திட்டம்,  அதன் 25 ஆவது ஆண்டு நிறைவை அடையாளப்படுத்துகிறது. மென்மையான பட்டுப்போன்ற  பீச் வண்ணச் சாயளுடனான, பீச் ஃபஸ் ஒன்றிணைந்திருத்தல், சமூகம் மற்றும் கூட்டாண்மை உணர்வுகளின் உறைவிடமாக திகழும் வகையில்  வசதியான மென்மையான சாரத்தைக் கொண்டுள்ளது.  இந்த புதிய பேன்டோன் கலர் ஆஃப் தி இயர்  PANTONE™ 13-1023 பீச் ஃபஸ், மோட்டோல்ரோலாவின் தூண்களாக விளங்கும், உள்ளடக்கல், மற்றும் அனைவரும் மேலும் எளிதாக அணுகும் வகையில் தொழில்நுட்பத்தை வழங்குதல் ஆகியவற்றோடு அழகாக இணக்கமாக ஒழுங்கமைந்துள்ளது.. மனித இனத்துடன் தொழில்நுட்பம் பின்னிப் பிணைந்த ஒன்றாக மாறிவருவதால், எங்களது கருவிகளோடு தங்களை வெளிப்படுத்திக்கொள்ளுதல், மற்றும் ஆழமான இன்னும் அதிகமான அர்த்தமுள்ள அனுபவங்களை பெறுவதற்கு   வண்ணங்கள் ஒரு கருவியாக  இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இதை 2024 ஆம் ஆண்டின் கலர் ஆஃப் தி இயர்,  அனுசரணை , ஒன்றிணைந்திருத்தல்  மற்றும் கருணை ஆகியவற்றுக்கான நமது விருப்பத்துடன் நமது மெய்நிகர் உலகையும் ஒன்றிணைத்து  நிறைவேற்றுகிறது. மனித இன தொடர்புகளின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கருவிகளைப் போலவே இந்த வண்ணமும் செயல்படுவதை பிரதிநிதித்துவப்படுத்த  உலகின் 1 ஆவது ஸ்மார்ட்போன் வெளியீடுகளாக motorola razr40 ultra and motorola edge 40 neo ஃபோன்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளன.  தொழில்நுட்பத்தை மேலும் எளிதாக அணுகக்கூடியதாகவும் மற்றும் நுகர்வோர் விருப்பத்துடன் இணைப்பை மேற்கொள்ள   தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உதவும்   மோட்டோரோலாவின் நோக்கத்தை PANTONE™ உடனான இந்த கூட்டாண்மை  வலுப்படுத்துகிறது.

தொடர்புகள் மற்றும் கூட்டாண்மைக்கென்றே கட்டமைக்கப்பட்ட Peach Fuzz வண்ணத்திலான புதிய motorola razr40 ultra, நவீன பாணியிலான  மற்றும் தங்களை சிறப்பாக  வெளிப்படுத்திக் கொள்ளும் நபர்களை கூட்டத்திலிருந்து தனித்துக் காட்சியளிக்கச் செய்கிறது razr40 ultra அதன் தனித்துவமான அடையாளமான மடக்கும் வடிவமைப்புடன், வேகமான 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 1100nits உச்ச பட்ச பிரகாசத்துடன் கூடிய  உலகின் மிகப்பெரிய வெளிப்புற 3.6-இன்ச் போலெட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஃபிளிப் ஃபோன் மடிக்கும்போது மிக மிக மெலிதானது மற்றும் இத்  தொழில்துறையின் 1 ஆவது டியூயல் ஆக்ஸிஸ் டியர் டிராப் ஹிஞ்ச் வடிவமைப்பின் காரணமாக இடைவெளியில்லாததாகவும் , பல நெகிழ்வான கோணங்களில் இந்த ஃபோன் எல்லையில்லா  நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.  ஃபோன் திறக்கப்படும் போது, 165 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 1400நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் கிட்டத்தட்ட 6.9” அகல க்ரீஸ்லெஸ் டிஸ்ப்ளேயை காட்சிப்படுத்துகிறது.  தனித்துவமான அடையாளம் கொண்ட இந்த  ஃபிளிப் ஃபோனில் தடையற்ற பயனர்  அனுபவத்தை உறுதி செய்யும் வகையில்  ஆற்றல் மிக்க Snapdragon® 8+ Gen 1 SoC பொருத்தப்பட்டுள்ளது,. razr40 ultra தலைமுறைகளைக் கடந்து, கவனத்தை ஈர்த்து,  இசைவிணக்கமான 2024 பான்டோன் கலர் ஆஃப் தி இயர்  இன் முன்மாதிரியாக விளங்குகிறது.

வாடிக்கையாளர்கள் இப்போது இத் தொழில்துறையின் மிகவும் மேம்பட்ட ஃபிளிப்-ஃபோன், razr40 ultra ஃபோனை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு  ரூ. 10,000.   மொத்தத் தள்ளுபடி உட்பட நம்பமுடியாத சலுகை விலையில் வெறும் ரூ. 69,999 க்கு பெற்றுக்கொள்ளலாம்.  ஃபிளிப் ஃபோன்களை இன்னும் மலிவு விலையில் மற்றும் எளிதாக அணுகக்கூடிய வகையில் நுகர்வோருக்கு வழங்க  மோட்டோரோலா மாதத்திற்கு வெறும் ரூ.7,778 தொடங்கி 3,6 மற்றும் 9 மாதங்களுக்கு எந்த ஒரு இதர கட்டணமுமில்லாமல் EMI சலுகைகளை முன்னணி வங்கிகளிடமிருந்து பெற்றுத் தருகிறது. புதிய Peach Fuzz வண்ணத்திலான ஃபோன் அமேசான், motorola.in மற்றும் முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் 12 ஜனவரி 2024 முதல் கிடைக்கும்.

Motorola edge 40 neo வண்ணத்தை வடிவமைப்பின் மையமாகக் கொண்டுள்ளது. வேகன் லெதரில் அடங்கியுள்ள பேன்டோன் பீச் ஃபஸ் வண்ணச்சாயல், இந்த ஃபோனின் இதமான வளைந்து நெளிந்த வடிவமைப்புக்கு கூடுதல் அழகை அளிக்கிறது.  நீர் எதிர்ப்புத் திறனில்  IP68 தரப் பாதுகாப்புடன் கூடிய இந்த5G ஃபோன் உலகின் மிக மிக எடை குறைவான ஸ்மார்ட்ஃபோன் ஆகும்,மற்றும்  தூசி, அழுக்கு, மணல் ஏன்  1.5 மீட்டர் சுத்தமான நீரில் 30 நிமிட நீரில் மூழ்க வைத்திருந்தாலும் எதையும் உட்புகவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.. மேலும், ஒரு பில்லியன் வண்ணங்கள் மற்றும் மனதுக்கு நிறைவான  உச்சபட்ச  பிரகாசத்துடனான அதன் வளைவான  144Hz 6.55-இன்ச் போலெட் டிஸ்ப்ளே 144Hz புதுப்பிப்பு விகிதத்துடன் நிறைவு செய்யப்பட்டு கூடுதல் திறன் பெறுகிறது.    இது அதன் UI செயல்பாடுகளைய்  எந்ததடையுமில்லாமல் மிக மிக ஸ்மூத் ஆக நடைபெறச்  செய்கிறது. செயல்திறனில் உலகின் முதலிடத்திலுள்ள  MediaTek Dimensity 7030 அதிமின்னல் வேக ப்ராசஸரைப் பெருமிதத்துடன் கொண்டிருக்கும் motorola edge 40 neo ஒரு ஆற்றல் மிக்க செயலகமாக அமைந்துள்ளது. இந்த 6nm சிப்செட் இது நம்பமுடியாத வேகத்திற்கான  Wi-Fi 6E ஐ ஆதரிக்கும் மற்றும் ஒரு சிறந்த கேமிங் அனுபவத்திற்கான  MediaTek HyperEngine™ கேம் தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது.

காண்போரின் கண்ணைக் கவரும் - புதிய பீச் ஃபஸ் நிறத்திலான motorola edge40 neo ஃபோன் , ஃப்ளிப்கார்ட், motorola.in மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில்  ஜனவரி 12, 2024 முதல் ரூ.22,999, தொடக்க விலைக்குக் கிடைக்கும்.

தொடர்புகள் மற்றும் ஆளுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த இரண்டு கருவிகளும்  வடிவமைக்கப்பட்டுள்ளன,  மேலும் நமது பொதுவான மனிதநேயத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அம்சங்களை வழங்குகின்றன. இவற்றில் எங்களின் சமீபத்திய மென்பொருள் தொடர்பான அனுபவங்கள், மோட்டோ அன்ப்ளக்ட மற்றும் ஃபேமிலி ஸ்பேஸ் ஆகியவையும் உள்ளடங்கும்.  இந்த இரண்டு செயலிகளும்  இணைந்திருத்தல் மற்றும் ஓய்வு, பாதுகாப்பு மற்றும் துணிச்சல் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை பராமரிக்கின்றன.

 மோட்டோ அன்பிளக்ட் மற்றும் ஃபேமிலி ஸ்பேஸ் போன்ற பல்வேறு மென்பொருட்களையும் மோட்டோரோலா வழங்குகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ அன்பிளக்ட் மென்பொருள் அனுபவம் ஸ்மார்ட்போன்களுடன் சிறந்த சமநிலையை அடைய பயனர்களுக்கு உதவுகிறது. ஆய்வுகள்  மற்றும் நுண்ணறிவுகளின் பின்புலத்தின் ஆதரவோடு நுகர்வோர் தொலைபேசிகள் மூலமான கவனச்சிதறல்களில் இருந்து விலகி சற்று ஓய்வெடுக்க உதவும் வகையில் மோட்டோ அன்பிளக்டை மோட்டோரோலா அறிமுகப்படுத்தியிருக்கிறது. நமது கருவிகளிடமிருந்து கவனத்தோடு சற்று விலகி சென்று நமக்கான நேரத்தைசெலவிடவும்  அதேசமயம் அருகாமையிலிருப்போருடனும் நேரத்தை செலவிட வேண்டியதின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களை முற்றிலும் துண்டித்துக் கொள்ளாமலும் தங்களுக்கான தனிமையை ஏகாந்தமாக அனுபவிக்கவும் ஓய்வெடுக்கவும் கட்டுப்படுத்தவும்முடியும். மோட்டோ அன்பிளக்ட் மூலம், பயனர்கள் ஒரு சிறப்பு மோட் ஐ செயல்படுத்த முடியும்., இது அவர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவையான ஒரு இடைவெளியை அமைத்துக்கொள்ள அவர்களுக்கு உதவும். ஃபேமிலி ஸ்பேஸ் அம்சம், ஒரு மோட்டோரோலா பயனர் தொலைவிலிருந்தபடியே ரிமோட் வழிகாட்டுதல்களுக்காக குறிப்பிட்டசில ஆப்களின் இடைமுகத்தைத் தேர்ந்தெடுத்து, பேரண்டல்கண்ட்ரோலை இயக்கவும், மற்ற மற்ற பிற பயனர்களின்  பயன்பாட்டு நேரத்தை குறிப்பாக குழந்தைகளின் பயன்பாட்டு நேரம் நிர்வகிக்கவும், உதவுகிறது.  

மோட்டோரோலா + பேன்டொன் கூட்டு குறித்து மேலும் தெரிந்து கொள்ள வருகை தரவும்: <https://www.motorola.in/pantone>

கிடைக்கக் கூடியவை  மற்றும் சலுகைகள்
Motorola razr40 Ultra
அசல் விலை : ரூ.  79,999
தனிப்பட்ட கால வரையறையுடனான தள்ளுபடி : ரூ. 10,000
Net Effective Price : Rs 69,999

மேலும் அறிந்து கொள்ளவும் மற்றும் motorola razr40 ultra
Motorola edge40 neo :
8GB + 128GB வகை : ரூ. 22,999
12GB + 256GB வகை : ரூ. 24,999

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu