ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளி 10 ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி  பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு  தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்று, 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி தனுசியா 490 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவி பேபி 486 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவன் சந்தோஷ் குமார் 482  மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை  பிடித்துள்ளார்.

அறிவியல், சமூக அறிவியலில் மாணவி தனுசியா கணக்கு பாடத்தில் மாணவர்கள் சந்தோஷ் குமார், சதீஷ், மாணவி ஜீவிதா ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் தேர்வு எழுதிய  மாணவர்களில் 500க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 41 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் சௌ.இராதா,  முதல்வர்ஏஞ்சல் பொன்ராஜ் துணை முதல்வர் சவிதா ஷெனாய், உதவி துணை முதல்வர் மயிலம்மாள் மற்றும் அனைத்து பாட ஆசிரியர்களும் பாராட்டினர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu