கடையம்-ஆலங்குளத்திற்கு புதிய பேருந்து இயக்க திமுக வலியுறுத்தல்

 

கடையம்-ஆலங்குளத்திற்கு புதிய பேருந்து இயக்கிட வேண்டுமென மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.கே.மயிலவன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலர் பொ.சிவபத்மநாதனை சந்தித்து அளித்த மனு:

பாபநாசத்தில் இருந்து இடைகால், பாப்பான்குளம், செல்லப்பிள்ளையார்குளம், ஏ.பி.நாடானூர், வள்ளியம்மாள்புரம், மாதாப்பட்டணம், பூலாங்குளம், பெத்தநாடார்பட்டி, பாவூர்சத்திரம், சுரண்டை வழியாக சங்கரன்கோவில் வரை தடம் எண் 130 பி இரண்டு பேருந்துகள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படவுள்ளது. எனவே நிறுத்தப்பட்ட மற்றொரு பேருந்தினை மீண்டும் இயக்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கடையம் ஒன்றியத்துக்குட்பட்ட தெற்கு மடத்தூர், ஏ.பி.நாடானூர், பாப்பான்குளம், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி ஊராட்சி பகுதி மக்கள் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகம் செல்ல போதிய பேருந்து வசதி இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் வசதிக்காக கடையத்தில் இருந்து பொட்டல்புதூர், காவூர், சொக்கலிங்கபுரம், சிவநாடானூர், முருகாண்டியூர் விலக்கு, ஏ.பி.நாடானூர், செல்லப்பிள்ளையார்குளம், பாப்பான்குளம், சிவஞானபுரம், இராவுத்தபேரி, கலிதீர்த்தான்பட்டி, ஏ.பி.நாடார்பட்டி, தாழையூத்து, ராம்நகர் வழியாக ஆலங்குளத்திற்கு புதிய பேருந்து இயக்கிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,


கருத்துரையிடுக

1 கருத்துகள்

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu