10 மாவட்டங்களில் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்

குறுவை மற்றும் சிறப்பு பருவம் 2௦22க்கான கடலூர், இராணிபேட்டை, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை , ராமநாதபுரம், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்காக பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தை (பிஎம்எஃப்பிஒய்) செயல்படுத்த இந்தியாவின் முன்னணி ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனமான எச்டிஎஃப்சி இஆர்ஜிஓ தமிழ்நாடு அரசு அங்கிகாரம் பெற்றுள்ளது.


இத்திட்டம் மரவள்ளிகிழங்கு, நெல், பருத்தி, சோளம், கரும்பு, நிலக்கடலை, கருப்பு உளுந்து, வாழை, சிவப்பு மிளகாய், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, வெங்காயம், எள்ளு, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, கேரட், தனியா மல்லி, கொண்டைக்கடலை ஆகிய பயிர்களுக்கு மாவட்டங்களில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும், அதற்கான குறிப்பிட்ட பயிர்களுக்கான பதிவு செய்யும் கடைசி தேதிகளும் வழங்கப்பட்டுள்ளது.


வறட்சி, வெள்ளம், வறண்ட காலநிலை, நிலச்சரிவு, புயல், சூறாவளி, ஆலங்கட்டி மழை, வெள்ளம், பூச்சிகள், நோய்கள் மற்றும் பிற போன்ற வெளிப்புற பாதிப்புகளால் பயிர் விளைச்சலில் ஏற்படும் இழப்புகளுக்கு பிஎம்எஃப்பிஒய் திட்டம் விவசாயிகளுக்கு காப்பீடு அளிக்கிறது. விளைச்சலில் ஏற்படும் இழப்பை உறுதி செய்ய, திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட பயிர்களில் பயிர் அறுவடை பரிசோதனைகளை (சிசிஇ-கள்) மாநில அரசு திட்டமிட்டு நடத்தும். சிசிஇ-களின் அடிப்படையில் மகசூல் தரவு குறைவாக இருந்தால், விவசாயிகள் தங்கள் விளைச்சலில் குறைவான விளைச்சல் பெற்றதாக கருதப்பட்டு, அதற்கான இழப்பீடு விவசாயிகளுக்குச் செலுத்தப்படும்.

இந்தத் திட்டம் நடவுக்கு முன், அறுவடை மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் ஆபத்துகள் உட்பட பயிர் சுழற்சியின் அனைத்து நிலைகளுக்கும் காப்பீடு வழங்குகிறது. பிஎம்எஃப்பிஒய் திட்டத்தின் கீழ் அனைத்து சாகுபடிகளும் தமிழ்நாடு அரசின் வேளாண்துறை மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  பயிர்களுக்கான பிஎம்எஃப்பிஒய் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெற தங்கள் மாவட்டத்தில் உள்ள அந்தந்த வங்கிகள், பொது சேவை மையங்களை அணுகலாம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எச்டிஎஃப்சி இஆர்ஜிஓ முகவர்களைத் தொடர்பு கொள்ளலாம். காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான செல்லுபடியாகும் காலம் குறித்த விவரங்களை விவசாயிகள் வேளாண்மைத் துறையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என எச்டிஎஃப்சி இஆர்கிஓ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu