தெற்கு மடத்தூரில்கிளை கால்வாய்: திமுக மாவட்டச்செயலாளரிடம் கோரிக்கை

 

கடையம் ஒன்றியத்தில், 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், தெற்கு மடத்தூரில் புதிய கிளை கால்வாய் அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.கே.மயிலவன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள   ராமநதி- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டமானது தங்களது முழு முயற்சியின் காரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் விரைவில் தொடங்கிடயிருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் கடையம் ஒன்றியத்தில்கடும் வறட்சி பகுதியான காவூர், ராமநாதபுரம்,மடத்துப்பட்டி, சொக்கலிங்கபுரம்  அணைந்த பெருமாள் நாடானூர், முருகாண்டியூர், செல்ல பிள்ளையார்குளம், ராவுத்தபேரி, தளவாய்புரம் போன்ற கிராமங்கள் பயன்பெறும் வகையில் தெற்கு மடத்தூரில் இருந்து ஒரு கிளை கால்வாய் அமைத்திட வேண்டும். இக்கால்வாய் அமைத்தால் காவூர்குளம், மடத்தூர் குளம், ஏபி நாடானூர் புதுக்குளம், செல்லபிள்ளையார்குளம், மூத்த நயினார் குளம், ராவுத்தபேரி பெரிய குளம் ஆகிய குளங்கள் நிரம்பி, சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.

மேலும் தென்காசியில் புதிதாக அமையவுள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில் வழக்கறிஞர்கள் வளாக கட்டிடமும் கட்டிட ஏற்பாடு செய்யும் வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இக்கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட ஏற்பாடு செய்வதாக மாவட்ட செயலாளர் உறுதியளித்துள்ளார்.


கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. வாழ்த்துகள் மகிழ்ச்சி விரைவாக இத்திட்டத்தை செயல்படுத்துமாரு தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறது

    பதிலளிநீக்கு
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu