25 வருட தொழிலாளியை முதலாளி ஆக்கிய மதுரை தொழிலதிபர்! இந்த மனசு எல்லோருக்கும் வராதுங்க!

தனது முதலாளிகளுடன், தொழிலாளியாக இருந்து முதலாளி ஆகியிருக்கும் ஆனந்த் (இடமிருந்து 2 வது) 

மதுரையில் 25 வருடங்களாக தன்னிடம் வேலை பார்த்து வரும் தொழிலாளியை முதலாளி ஆக்கியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர்கள். இந்த மனசு எல்லோருக்கும் வராதுங்க... என்று பலராலும் பாராட்டப்பட்டு வரும் அந்த தொழிலதிபர்கள் ஏ.சம்பத்குமார் மற்றும் ஜே.கே.முத்து ஆகியோர் ஆவர்.

மதுரையைச் சேர்ந்த டோன் டீலிங்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மதுரையில் இருந்து உற்பத்தி செய்து தமிழகத்தில் மட்டுமில்லாமல், உலகில் பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் வட மாநிலங்களுக்கும் சாம்பிராணி, மற்றும் பூஜைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஸ்ரீமதி, பாஞ்சஜன்யா, யவனிகா, ஜில்ஸ், வாசம், மதுரை மல்லி, ஜேக்ப்ரூட் உள்ளிட்ட பெயர்களில் அகர்பத்திகள், சாம்பிராணி, கப் சாம்பிராணி உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன. 1997ம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைவராக ஏ.சம்பத்குமார், நிர்வாக இயக்குனராக ஜே.கே.முத்து ஆகியோர் இருந்து வருகிறார்கள். சாம்பிராணி விற்பனை மூலம் உலகமெங்கும் நறுமணத்தைப் பரப்பி வரும் இந்த பார்ட்னர்கள்தான் இப்போது தங்களிடம் ஆரம்ப காலம் முதல் இன்று வரை விசுவாசமாக வேலை பார்த்து வரும் தொழிலாளியை முதலாளி ஆக்கி, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர். 


ஆரம்பகாலத்தில் தொழிலாளியாக, 
சம்பத்குமார், ஜே.கே. முத்து ஆகியோருடன் ஆனந்த்

இதுதொடர்பாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜே.கே.முத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  எமது "ஸ்ரீமதி அரோமா & பூஜா ஸ்டோர் (மொத்தம் & சில்லறை நிலையம்)" துவக்கப்பட்டுள்ளது.  இதன் இணை உரிமையை எங்கள் நிறுவனத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய தம்பி "திரு. ஆனந்த்"க்கு கொடுத்துள்ளோம்.

நான் ஆடியோ கேசட் தொழில் செய்யும்போது "ஆனந்த்" -ன் தந்தை எங்கள் குடும்ப நண்பர் "பன்னீர் செல்வம் அண்ணன்" அவர் தனது மகன் "ஆனந்த்" க்கு படிப்பு ஏறவில்லை என்றும் அவன் தற்போது பைண்டிங் ஆபீசில் வேலை செய்வது எனக்கு பிடிக்கவில்லை அவனை நீ சேர்த்துக்கொள் என்று சேர்த்துவிட்டார் அப்போது "ஆனந்த்" -க்கு வயது 14. தொடர்ந்து பல பொறுப்புக்களை வழங்க முயற்சித்து "ஆனந்த்" அதற்கு ஆட்படாவிட்டாலும், "ஆனந்த்" -ன் தொடர் உழைப்பும்  நேர்மையும் எங்கள் நிறுவனத்திற்கு முக்கியமானது.

"ஆனந்த்"-ன் குடும்பம் மற்றும் எதிர்கால நலனுக்காக சம்பளத்தை தாண்டி "ஆனந்த்"-ஐ முதலாளி ஆக்கவேண்டும் என்று எண்ணி எமது ஆரம்பக்கால கடையை எங்கள் நிறுவனத்தின் நேரடி விற்பனை மையமாக மாற்றி "ஆனந்த்" -க்கு வழங்கியுள்ளோம் என்பதை பெருமையுடன் பகிர்கிறேன்,  என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் ஆனந்த்துக்காக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள 
ஸ்ரீமதி அரோமா & பூஜா ஸ்டோர் 

தொழிலாளியாக 25 ஆண்டுகள் பணியாற்றி, முதலாளி ஆகியிருக்கும் ஆனந்த் கூறுகையில், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எங்க கம்பெனி என்னைப் போன்ற தொழிலாளிகளை கைவிட்டதில்லை. எனக்கு தனியாக ஸ்ரீமதி அரோமா & பூஜா ஸ்டோர் வைத்துக் கொடுத்த நிறுவனத்துக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த நல்ல மனசு எல்லோருக்கும் வராது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், விற்பனைக்கும் இன்னும் அதிகமாக பாடுபடுவேன், என்றார். 

தான் வாழ்ந்தால் மட்டும் போதாது; தன்னைச் சார்ந்திருப்பவர்களும் வாழ வேண்டும், அவர்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்காது. அப்படி எண்ணும் வெகு சிலரில் இந்த சம்பத்குமார், ஜே.கே.முத்து பார்ட்னர்கள் முக்கியமானவர்கள். இவர்களது இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த டோன் டீலிங்ஸ் பிரைவேட் நிறுவனம் இன்னும் பல சமூக சேவைகளை தங்களது சமுதாய பார்வை (Socialfocus.org) என்ற அறக்கட்டளை மூலம் இயலாதவர்கள் பலருக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக திருமண உதவித்தொகை, கல்வி உதவி, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்படுகிறது. இதற்காக நிறுவனத்தின் இலாபத்தில் ஒரு பகுதியை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டோன் டீலிங்க்ஸ் நிறுவனத்துக்கும், அதன் பங்குதாரர்கள் சம்பத்குமார், முத்து ஆகியோருக்கும் நாமும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்வோம்.

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. நேர்மைக்கும்; விசுவாசத்துக்கும் நிச்சயம் ஒரு நாள் பரிசு கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒர் சான்று!

    நண்பர்களுக்கு வாழ்த்துகளும்; பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி அண்ணா

    பதிலளிநீக்கு
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu