சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆனது, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலின் முக்கியத்துவம் மற்றும் தகவல்களைப் பார்வையாளர்கள் எளிதில் அறியும் வகையிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை நிறைவு செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம், சோழா நிறுவனம் தனது 'சம்ரக்ஷணம்' திட்டத்தின்கீழ் இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் தனக்குள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்திய அரசின் 'பாரம்பரியத்தை தத்தெடு 2.0' திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாகத் தத்தெடுக்கப்பட்ட கோயில் என்ற பெருமையை கைலாசநாதர் கோயில் பெற்றுள்ளது. இத்திட்டம் பாரம்பரியப் பாதுகாப்பு, அணுகல் வசதிகள் மேம்பாடு, வரலாற்று விளக்கக் காட்சிகள், மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள், பகுதிகளை அழகுபடுத்துதல் மற்றும் தொடர் பராமரிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதுடன் காஞ்சிபுரத்தின் செழுமையான கோயில் பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ளவும் வழிவகுக்கிறது.இக்கோயிலின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைப் பார்வையாளர்கள் சிறப்பான முறையில் புரிந்துகொள்ளவும், அதன் கட்டடக்கலையின் செழுமையைப் போற்றவும், எதிர்காலச் சந்ததியினருக்கான பாரம்பரியப் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தவும் உதவுவதன் மூலம், கைலாசநாதர் கோயிலுக்கான வருகையை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் வெள்ளையன் சுப்பையா கூறுகையில், "நமது முன்னோர்களிடமிருந்து நாம் பெற்ற பாரம்பரியத்தைப் பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்கவும், புரிந்துகொள்ளவும், அதன் மதிப்பை உணர்ந்து போற்றவும் வழிவகுக்கும் போதுதான், பாரம்பரியப் பாதுகாப்பு முழுமையான அர்த்தத்தைப் பெறுகிறது என்பதை 'சோழா' நிறுவனம் முழுமையாக நம்புகிறது. கைலாசநாதர் கோயில் இந்தியாவின் கட்டடக் கலை மற்றும் கலாச்சாரப் பெருமையின் சிறப்பான அடையாளமாகத் திகழ்கிறது. இந்த முயற்சியின் மூலம், இக்கோயிலின் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதுடன், இதன் வரலாறு, கட்டடக்கலை மற்றும் முக்கியத்துவத்தை வரும் ஒவ்வொரு பார்வையாளரும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் வழிவகை செய்துள்ளோம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வரலாற்று விளக்க மையம், இந்த வரலாற்றுச் சின்னத்திற்கும் வருகை தரும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டு, கோயிலின் செழுமையான வரலாற்றை சுவாரஸ்யமான மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவமாக அவர்களுக்கு வழங்குகிறது" என்று தெரிவித்தார்.
சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திர குமார் குண்டு கூறுகையில், "8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகச்சிறந்த பல்லவர் காலச் சின்னமான கைலாசநாதர் கோயில், இந்தியாவின் கட்டடக்கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான அத்தியாயத்தைக் குறிக்கிறது. பாரம்பரியத்தை பார்வையாளர்களுக்கு மேலும் அணுகக்கூடியதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதன் மூலம், அரசின் பாதுகாப்பு முயற்சிகளுக்குத் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பு எவ்வாறு உறுதுணையாக இருக்கும் என்பதை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது. 'பாரம்பரியத்தை தத்தெடு 2.0' திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் நிறைவுபெற்ற முதல் கோயில் திட்டம் இது என்பதால், நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் நோக்கில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அரசு-தனியார் கூட்டு முயற்சிகளுக்கு இது ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைகிறது" என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்