தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பெண்கள் அமைச்சர் கு.ஜெகதீஸ்வரிக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.
தவெக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சித்தராபுத்தன்பாளையம், கவுண்டச்சிபுதூர், அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பெண்களிடையே அமைச்சர் கலந்துரையாடினார்.
தொடர்ந்து பெண்களிடம் பேசிய அமைச்சர், பெண்களின் பொருளாதார முன்னேற்றம் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமைகிறது என்றும் அதற்கான முன்னெடுப்புகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
மகளிர் சுய உதவி குழுக்கள் மேம்படுத்தப்படுவதுடன், தாராபுரம் பெண்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஆன்லைன் சந்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்படும் என்றும், பெண் தொழில்முனைவோருக்கு பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மேலும், பெண் குழந்தைகளின் கல்வி தொடர தேவையான ஆதரவு மற்றும் தனியாக குடும்பத்தை நடத்தும் பெண்களுக்கு அரசு உதவிகள் எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பெண்கள் நலனுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்த அமைச்சர் கு.ஜெகதீஸ்வரியை தாராபுரம் பெண்கள் வாழ்த்தி வரவேற்று மகிழ்ந்தனர்.
#Dharapuram #MinisterJagadeeswari #byelection. #tvk #cmvijay #DharapuramCampaign

0 கருத்துகள்