பெரம்பலூரில் பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’ திறப்பு

இந்தியாவின் முன்னணி ஸ்பிரிங் மெத்தை மற்றும் தூக்கத் தீர்வுகளை வழங்கும் பிராண்டான பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பெரம்பலூரில் தனது 135-ஆவது ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’-ஐ திறந்து வைத்து, தமிழ்நாட்டில் தனது வணிக இருப்பை வலுப்படுத்தியுள்ளது.

இந்த புதிய ஸ்டோர், பெப்ஸ் நிறுவனத்தின் தொடர்ச்சியான சில்லறை விற்பனை விரிவாக்கப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உயர்தர தூக்கத் தீர்வுகளை எளிதில் கிடைக்கச் செய்வதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் வலியுறுத்துகிறது.காரைக்குடியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள இந்த விற்பனை மையம், வாடிக்கையாளர்களுக்கு மெத்தைகளைத் தேர்வு செய்து வாங்கும் அனுபவத்தை நேரடியாகவும், தனிப்பயனாக்கப்பட்டதாகவும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸின் விற்பனைப் பிரிவு பொது மேலாளர் எஸ்.ராஜேஷ், சிறப்பு விருந்தினர்கள், வணிகக் கூட்டாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த ஸ்டோரை திறந்து வைத்தார்.

எண் 111 எஸ்எச் 142, துரைமங்கலம், (புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில்) பெரம்பலூர் 621220 என்கிற முகவரியில் அமைந்துள்ள இந்த புதிய ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’, நவீன தூக்க அனுபவ மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் பெப்ஸ் நிறுவனத்தின் விரிவான ஸ்பிரிங், ஃபோம் மற்றும் கயர் மெத்தைகள் வரிசையுடன், தலையணைகள், மெத்தை பாதுகாப்பு உறைகள் மற்றும் பிற தூக்கத் உபகரணங்களையும் பார்வையிட்டு தேர்வு செய்யலாம். இந்த ஸ்டோர், தயாரிப்புகளை நேரடியாக அனுபவித்து ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பை வழங்குவதுடன், பல்வேறு தூக்கத் தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து, தனிநபர் வசதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப பொருத்தமான தூக்கத் தீர்வுகளைத் தேர்ந்தெடுக்க வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.

நுகர்வோரின் மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் வசதித் தேவைகளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பெப்ஸ், தனது சமீபத்திய தயாரிப்பு புதுமைகளான பெப்ஸ் கம்ஃபோர்ட் சீரிஸ், பெப்ஸ் சுப்ரீம் சீரிஸ், பெப்ஸ் ரெஸ்டொனிக் மெமரி ஃபோம் ரேஞ்ச் மற்றும் பெப்ஸ் சுப்பிரியர் ஸ்ப்ரிங் கலெக்‌ஷன் ஆகியவற்றை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. பல்வேறு தூக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தயாரிப்புகள், மேம்பட்ட உடல் ஆதரவு, உயர்தர வசதி மற்றும் நீண்டகால நீடித்த தன்மையை வழங்குகின்றன.

இந்த புதிய ஸ்டோர் திறப்பு குறித்து கருத்து தெரிவித்த பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் ஜி. சங்கர் ராம் கூறுகையில், “தமிழ்நாடு எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தைகளில் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது. பெரம்பலூரில்  எங்களின் 136-ஆவது ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’ திறக்கப்படுவதன் மூலம் எங்களது இருப்பை மேலும் விரிவுபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தரமான தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதுமையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தூக்கத் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த புதிய ஸ்டோர், காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முழுமையான மற்றும் அனுபவமிக்க ஷாப்பிங் சூழலை வழங்குவதோடு, சிறந்த தூக்கம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான சரியான தேர்வுகளை மேற்கொள்ளவும் உதவும்” என்றார். 

சுமார் 1,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரத்யேக ஸ்டோர், வாடிக்கையாளர்கள் பல்வேறு மெத்தைத் தொழில்நுட்பங்களை நேரடியாக அனுபவித்து அறியவும், அவற்றின் வசதித் தரங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும், வாங்கும் முடிவை எடுப்பதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறவும் ஏதுவான விற்பனைச் சூழலை வழங்குகிறது.

தென்னிந்தியா முழுவதும் தனது சில்லறை விற்பனை வலையமைப்பை பெப்ஸ் தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அதன் முக்கிய சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பெரம்பலூர் ஸ்டோரின் திறப்பு, உலகத் தரம் வாய்ந்த தூக்கத் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு மேலும் எளிதில் கிடைக்கச் செய்வதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீட்டு முயற்சிகளையும், மாநிலத்தின் வளர்ந்து வரும் நகரங்கள் மற்றும் குடியிருப்பு மையங்களில் தனது இருப்பை வலுப்படுத்தும் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu