ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதய நோய்களுக்கு குறைந்த ஊடுருவலுடனான (Minimally Invasive) அறுவை சிகிச்சை முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், நாராயணா ஹெல்த் சிட்டி சேலம் நகரில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெங்களூருவிலுள்ள நாராயணா ஹெல்த் சிட்டியினஇதய அறுவை சிகிச்சை நிபுணர், மூத்த ஆலோசகர் டாக்டர் திருத்தணி குமரன் எம்.எம். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை முறைகள் இன்று இதய சிகிச்சை துறையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளதுடன், பாதுகாப்பான, குறைந்த காயத்துடன் விரைவான குணமடைதலை வழங்கும் சிகிச்சை முறையாக உருவெடுத்துள்ளதாக கூறினார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, நாராயணா ஹெல்த் சிட்டி மேம்பட்ட இதய சிகிச்சை துறையில் முக்கியமான சாதனையை எடுத்துக்காட்டியது. இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்காக 1,200-க்கும் அதிகமான ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. குறிப்பாக, மருத்துவமனையில் ஏப்ரல் 2025-ல் இதய ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 200-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மொத்த ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளில் சுமார் 17 சதவீதமாகும்.
ரோபோடிக் இதய் அறுவை சிகிச்சையின் வளர்ந்து வரும் பயன்பாடு குறித்து பேசிய டாக்டர் திருத்தணி குமரன் எம்.எம் : “ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை இன்று சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் முறையையே மாற்றி அமைத்து வருகிறது. ரோபோடிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன், அதிக துல்லியமான அறுவை சிகிச்சை, குறைந்த இரத்த இழப்பு, குறைவான வலி, சிறிய அளவிலான காயங்கள், குறுகிய கால மருத்துவமனை தங்குதல் மற்றும் நோயாளிகளுக்கு விரைவான குணமடைதல் போன்ற பல நன்மைகளை வழங்க முடிகிறது. முன்பு மிகவும் சவாலானதாக கருதப்பட்ட அறுவை சிகிச்சைகளையும் தற்போது குறைந்த காயங்களுடன் அதிக பாதுகாப்புடனும் துல்லியத்துடனும் மேற்கொள்ள முடிகிறது.” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “1,200-க்கும் அதிகமான ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது ஒரு எண்ணிக்கை மட்டுமல்ல; இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து வரும் நோயாளிகள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நோயாளிகள் எங்கள் மையத்தில் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்வதில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு காணப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து அதிகரித்து வரும் இந்த வரவேற்பு, குறைந்த காயத்துடனான ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை குறித்து நோயாளிகளிடையே விழிப்புணர்வும் நம்பிக்கையும் உயர்ந்து வருவதை காட்டுகிறது. விரைவான குணமடைதல், அறுவை சிகிச்சைக்குப் பின் குறைந்த அசௌகரியம், இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்புதல் மற்றும் சிறந்த சிகிச்சை முடிவுகள் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன,” என்றார்.
மேம்பட்ட இதய சிகிச்சை முறைகள் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாராயணா ஹெல்த் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சைக்காக மருத்துவமனையை அணுகுதல், இந்த பகுதியில் இதய சிகிச்சை மற்றும் மேம்பட்ட ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளுக்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கான வலுவான சான்றாகும். மேலும், சிக்கலான இதய சிகிச்சைகளை மேம்பட்ட தொழில்நுட்பத்துடனும் உயர்தர மருத்துவ நிபுணத்துவத்துடனும் வழங்கும் நாராயணா ஹெல்த் சிட்டி மீது நோயாளிகள் வைத்துள்ள நம்பிக்கையையும் இது வெளிப்படுத்துகிறது. டாக்டர் திருத்தணி குமரன் எம்.எம். அவர்கள் ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமையன்று சேலம் மின்னாம்பள்ளியில் உள்ள ஜெய் தேவ் மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். இதன் மூலம், நோயாளிகள் தங்களது சொந்த ஊருக்கு அருகிலேயே சிறந்த மருத்துவ ஆலோசனையும் தொடர்ச்சியான சிகிச்சை வழிகாட்டுதலையும் பெற முடிகிறது.
நாராயணா ஹெல்த் சிட்டியின் இதய அறுவை சிகிச்சை குழு பல சிக்கலான மற்றும் அரிய வகை ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. அவற்றில் கடுமையான ரியூமாட்டிக் மைட்ரல் ஸ்டினோசிஸ் நோய்க்கான ரோபோடிக் மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை, அரிதான டெக்ஸ்ட்ரோகார்டியா மற்றும் சிடஸ் இன்வெர்சஸ் குறைபாடுகளுடன் இருந்த நோயாளிக்கான ரோபோடிக் கொரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவை சிகிச்சை (CABG), மேலும் CABG அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட மைக்ஸோமா கட்டியை அகற்றும் மிகவும் சவாலான மறுஅறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும். குறிப்பாக, குறுக்கு கிளாம்ப் (cross-clamp) பயன்படுத்தாமல், இதய துடிப்பை கட்டுப்படுத்திய நிலையில் (fibrillatory arrest) தொரகோட்டமி முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை உலகளவில் மிகவும் அரிதாக விவரிக்கப்பட்ட அணுகுமுறையாகும்.
இந்த சாதனைகளைப் பற்றி விளக்கமாக கூறிய டாக்டர் திருத்தணி குமரன் எம்.எம்: “உலகளவில் மிகவும் அரிதாகவே பதிவாகியுள்ள பல சிக்கலான மற்றும் அபூர்வமான ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை எங்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. திறமையான அறுவை சிகிச்சை நிபுணத்துவத்துடன் இணையும் ரோபோடிக் தொழில்நுட்பம், இதய மருத்துவத் துறை இதுவரை எட்டாத புதிய பரிமாணங்களுக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது என்பதை இத்தகைய சாதனைகள் நிரூபிக்கின்றன,” என்றார்.
நாராயணா ஹெல்த் சிட்டி, இன்றைய அதிகரித்து வரும் அசைவற்ற (sedentary) மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைமுறையால் உருவாகும் கடுமையான இதய நோய்களைத் தடுப்பதில் ஆரம்பகட்ட நோயறிதல், வழக்கமான இதய பரிசோதனை மற்றும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியது.இந்த முயற்சியின் மூலம், நாராயணா ஹெல்த் சிட்டி, பிராந்தியத்தில் அடுத்த தலைமுறை ரோபோடிக் மற்றும் குறைந்த காயங்களுடனான இதய சிகிச்சை முறைகளை மேம்படுத்தும் தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்