ஷிவ் நாடார் பல்கலைக்கழக 2026 சேர்க்கை தொடக்கம்

ஷிவ் நாடார் அறக்கட்டளையின் உயர்கல்வி முன்முயற்சியும், தமிழக அரசால் 90 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டம் இயற்றப்பட்ட முதல் மாநிலத் தனியார் பல்கலைக்கழகமும் ஆன ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னை, 2026-27 கல்வியாண்டிற்கான இளங்கலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.  எதிர்கால மாணவர்கள் 15 ஜனவரி 2026 முதல் பிரத்யேக சேர்க்கை இணையதளமான <https://www.snuchennai.edu.in/ug-admissions/> என்ற முகவரி வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இடங்களின் எண்ணிக்கை, தேர்வு முறை, பாடத்திட்டம், கல்வி உதவித்தொகை குறித்த விவரங்கள் இந்த இணையதளத்தில் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. 

வளர்ந்து வரும் கல்வி மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு இளங்கலை படிப்புகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் கீழ் பி.டெக் பிரிவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், பயோமெடிக்கல் பொறியியல், வேதியியல் பொறியியல், சிவில் பொறியியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், சிஎஸ்இ (சைபர் செக்யூரிட்டி), சிஎஸ்இ  (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்), மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், இசிஇ (விஎல்எஸ்ஐ டிசைன் மற்றும் டெக்னாலஜி), தகவல் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரப் பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

கூடுதலாக, வணிகம் மற்றும் மேலாண்மைப் பள்ளியில் பி.காம் மற்றும் பி.காம் (புரொபஷனல் அக்கவுண்டிங்) உள்ளிட்ட இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஸ்கூல் ஆஃப் சையன்ஸ் அண்ட் ஹியுமேனிட்டிஸ்-இன் கீழ் பி.எஸ்சி பொருளாதாரம் (தரவு அறிவியல்) பயிற்றுவிக்கப்படுகிறது. ஷிவ் நாடார் ஸ்கூல் ஆஃப் லா அனைத்து கல்விப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் சேரக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த பி.ஏ., எல்.எல்.பி. திட்டத்தை வழங்குகிறது.


அணுகல்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னை நுழைவுத் தேர்வு (SNUCEE), நாடு முழுவதும் 14 மையங்களிலும், கூடுதலாக துபாயில் ஒரு தேர்வு மையத்திலும் நடத்தப்படும். தேர்வு மையங்களின் முழுமையான பட்டியல் - எஸ்என்யுசி (SNUC) சென்னை வளாகம், சென்னை (வளாகம் அல்லாத மையம்), கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், பெங்களூரு, ஐதராபாத், விஜயவாடா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம், துபாய் ஆகும்.

எஸ்என்யுசிஇஇ (SNUCEE) நுழைவுத் தேர்வின் பல்வேறு கட்டங்கள் 11 ஏப்ரல் 2026 அன்று தொடங்கி, இறுதிக்கட்டம் 9 மே 2026 அன்று நடைபெறும். ஒவ்வொரு கட்டத்திற்கும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தகவல் கையேட்டில் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் நேரத்தில் அந்தந்த தேர்வு மையங்களில் எஸ்என்யுசிஇஇ இடங்கள் காலியாக இருப்பதைப் பொறுத்தே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இது குறித்து ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னையின் துணைவேந்தர் டாக்டர் ஸ்ரீமன் குமார் பட்டாச்சார்யா அவர்கள் கூறியதாவது, "உயர்கல்வி தொடர்ந்து பரிணமித்து வரும் நிலையில், பல்துறை சார்ந்த அறிவு, எதிர்காலத் தேவைகளுக்கான தயார்நிலை, மற்றும் நிஜ உலக சவால்களுடன் ஆழமான தொடர்புடைய இளங்கலை படிப்புகளை உருவாக்குவதில் எங்களது கவனம் தொடர்கிறது. ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னையில், மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, பெருகி வரும் சிக்கலான உலகளாவிய சூழலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறன்களை அவர்களுக்கு வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்." 

சேர்க்கை நடைமுறை மற்றும் தகுதி

பொறியியல், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை, ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னை நுழைவுத் தேர்வு (SNUCEE) மற்றும் அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான நேர்காணல் மூலம் நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் (JEE Main) தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களும் நேர்காணலுக்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர். கிராமப்புற மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, மெரிட் மற்றும் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி சேர்க்கை வழங்கப்படும்.

தகுதி அளவுகோல்கள் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடும். பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களைப் படித்திருக்க வேண்டும். வணிகவியல் மற்றும் பொருளாதாரப் படிப்புகளுக்கு தொடர்புடைய கல்விப் பின்னணி கொண்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ., எல்.எல்.பி திட்டத்தில் அனைத்துப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் சேரலாம்.

ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னை, தகுதியின் அடிப்படையிலான சேர்க்கை முறையைத் தீவிரமாகப் பின்பற்றுகிறது. இதில் மெரிட் (Merit), மெரிட்-கம்-மீன்ஸ் (Merit-cum-Means), விளையாட்டு, வாக்-இன்-வாக்-அவுட் (Walk-in-Walk-out) போன்ற பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. நிதி நெருக்கடி என்பது தகுதியுள்ள மாணவர்களின் தரமான கல்விக்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் இப்பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது.

ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னை, தனது ஐந்தாவது ஆண்டு செயல்பாட்டை நிறைவு செய்ய உள்ளது. 2026-27 கல்வியாண்டில் இருந்து புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மாணவர்களும், பெற்றோர்களும் கூடுதல் விவரங்களுக்கு <https://www.snuchennai.edu.in/> என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது 1800 208 1199 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது admissions@snuchennai.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu