அரசுத் துறைகளுடன் Amazon India நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது

இன்று பாரம்பரிய கைவினைஞர்கள், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள், வளர்ந்து வரும் தொடக்க நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பில் ஆராய்ச்சி-ஊக்குவிக்கப்பட்ட புத்தாக்கங்கள் ஆகியவற்றை ஆதரிக்க பல இந்திய அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுடன் கூட்டுழைப்புகளை Amazon India நிறுவனம் இன்று அறிவித்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் (MoMSME), தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக  மேம்பாட்டுத் துறை (DPIIT) மற்றும் இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள காடி சக்தி விஸ்வவித்யாலயா  (GSV) ஆகியவற்றுடன் ஆன இந்த கூட்டாண்மைகள் சந்தை அணுகலை விரிவுபடுத்தவும், திறனை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் இந்தியாவின் பொருளாதார  முன்னுரிமைகளுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க நோக்கம் கொண்டுள்ளன.

இந்த கூட்டான்மைகளைப் பற்றி பேசிய Amazon India நிறுவனத்தின் நாட்டு மேலாளர் சமீர் குமார் கூறுகையில், "கைவினைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆதரவளிப்பதுடன், வளர்ந்து வரும் லாஜிஸ்டிக்ஸ் சூழல் அமைப்பு  ஆகியவற்றுக்காக  இந்திய அரசு நிறுவனங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நாடு முழுவதுமுள்ள சமூகங்களுக்கும் வணிகங்களுக்குமான அணுகலை விரிவுபடுத்துகின்ற அதே வேளையில் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி இலக்குகளுக்குப் பங்களிப்பதற்கான வாய்ப்புகளாக இந்த கூட்டாண்மைகள் இருக்கின்றன."என்றார்.

ஆராய்ச்சி மற்றும் துறை திறனை ஆழப்படுத்த, போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றிற்காக பிரத்தியேகமான இந்தியாவின் முதல் லாஜிஸ்டிக்ஸ் பல்கலைக்கழகமான காடி சக்தி விஷ்வவித்யாலயா  (GSV) உடன்  Amazon இணைந்து செயல்படுகிறது.   துணைவேந்தரின் அலுவலகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம்  முறைப்படுத்தப்பட்டு, ரயில் சரக்கு பாதைகள், பல்-முறைமை போக்குவரத்து, தொழில்நுட்பம் சார்ந்த லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை முன்முயற்சிகள் ஆகியவற்றில் இந்த  கூட்டாண்மை கவனம் செலுத்தும். இது இந்தியாவில் கிடங்கு சேமிப்பு வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடுவதையும் உள்ளடக்கும். இந்த இணைப்பின் ஒரு பகுதியாக, பொது ஆர்வம் உள்ள துறைகளில் நீண்டகால பணிகளை முன்னெடுப்பதற்காக, GSV யில் ஒரு அர்ப்பணிப்புள்ள ஆராய்ச்சி தலைவர் பதவிக்கு Amazon ஆதரவு அளிக்கும். 

காடி சக்தி விஸ்வவித்யாலயா வின் துணைவேந்தர் பேராசிரியர்  மனோஜ் சௌத்ரி கூறுகையில், “நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் துறைக்கான ஒரே பல்கலைக்கழகமாகிய GSV, தீவிர ஆராய்ச்சி மற்றும் சிறப்புத்  திறமைகளை வளர்ப்பதன் மூலம் இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. லாஜிஸ்டிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான Amazon இந்தியா  நிறுவனத்துடன் ஆன எங்கள் ஒத்துழைப்பு, கூட்டுப் பணித் திட்டங்கள் மூலம் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் தகவலறிந்த திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் புத்தாக்கத்திற்கு உதவுகிற மதிப்புமிக்க தொழில் துறை நுண்ணறிவுகளைக் கொண்டுவருகிறது .” என்றார்.

பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களான கொல்லர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், தச்சர்கள் மற்றும் சிற்பிகள் போன்றோரின் தலைமுறை தலைமுறையாகப் பயின்று வரும் திறமைகளை ஆதரிக்கும் பிரதமர் விஸ்வகர்மா திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக, Amazon India,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்துடன் (MoMSME) கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கைவினைஞர்கள் ஆடை, வீட்டு அலங்காரம், காலணிகள் மற்றும் நகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களது கைவேலைப்பாடுகளை காட்சிப்படுத்துவதற்கு அவர்களுக்கு உதவுகின்ற Amazon இன்  கரிகார் திட்டத்தின் கீழ் amazon.in இல் இணைக்கப்படுவார்கள்.  Amazon இன் கரிகார் திட்டம், பாரம்பரிய கைவேலைகளைப் பாதுகாக்க மற்றும் கைவினைஞர்களுக்கு அதிக டிஜிட்டல் மற்றும் சந்தை அணுகலை வழங்க அரசாங்க அமைப்புகள் மற்றும் கைவினைஞர் கூட்டுறவுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் மேம்பாட்டு ஆணையரான டாக்டர் ரஜ்னீஷ் கூறுகையில், “இந்த பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம், கருவிகள், பயிற்சி மற்றும் சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பாரம்பரிய கைவினைஞர்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ந்த பாரதம் என்ற நமது தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கின்ற வகையில் Amazon India  நிறுவனத்துடனான  எங்கள் ஒத்துழைப்பு, இந்தக் கைவினைஞர்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மேலும் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்கவும், நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கவும் ஆதரவளிக்கும்.” என்றார்.

Amazon, பெண்கள் தலைமையிலான தொழில்கள் மற்றும் ஆரம்ப கட்ட தொடக்க நிறுவனங்களை மேலும் ஆதரிப்பதற்காக, DPIIT  உடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளது.  இந்த வலுப்படுத்தப்பட்ட கூட்டாண்மையின் கீழ், 'சஹேலி ஆக்சிலரேட்' திட்டம், அடுக்கு இரண்டு மற்றும் அடுக்கு மூன்று நகரங்கள் மீது ஒரு கூர்மையான கவனம் மற்றும் ஆழ்ந்த வழிகாட்டுதல் ஆதரவு ஆகியவற்றுடன் 18 முதல் 50 பெண்கள் தலைமையிலான தொழில்களுக்கு விரிவுபடுத்தப்படும். Amazon அதற்கு கூடுதலாக, Amazon.in சந்தை இடத்தில் இணைகின்ற நேரடியாக வாடிக்கையாளருக்கான  ஸ்டார்ட்அப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான இணைப்பு மற்றும் தொடக்க உதவிகளை Amazon வழங்கும்.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளர் திரு. சஞ்சீவ் கூறுகையில், “  இந்தியாவின் புத்தாக்கச் சூழலை, குறிப்பாகப் பெண்களால் நடத்தப்படும் வணிகங்கள் மற்றும் இளம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடையே, வலுப்படுத்துவதை நோக்கி DPIIT தொடர்ந்து பணியாற்றி வருகிறது,   இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.   Amazon India  உடனான ஸ்டார்ட்அப் இந்தியா இன் ஒத்துழைப்பு, வழிகாட்டுதல், சந்தைகள் மற்றும் ஆரம்பக்கட்ட ஆதரவுக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது,” என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu