2025ஆம் ஆண்டு ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்துக்கு ஒரு முக்கிய மைல்கல் ஆண்டாகும், ஏனெனில் ஸ்கோடா இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது 25 ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறது. 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த பிராண்டு இந்தியாவில் இதுவரையிலான மிக அதிக விற்பனையை பதிவு செய்து ஒரு சிறப்பான மைல்கல்லை எட்டியது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, ஸ்கோடா ஆட்டோ இந்தியா 61,607 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவரை சிறந்த காலாண்டு மற்றும் அரையாண்டு முடிவுகளைப் பதிவு செய்த வலிமையான செயல்திறனையும் தொடர்ந்து, 2025 அக்டோபர் மாதம் புதிய மாதாந்திர சாதனையாக 8,252 கார்கள் விற்பனைவாகியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் முதல் சப் 4 மீட்டர் எஸ்யுவியான கைலாக் உள்ளது. அதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தனித்துவ ஆடம்பர 4எக்ஸ்4 கார் கோடியாக், அதனைத் தொடர்ந்து டிமாண்ட் குஷாக் மற்றும் ஸ்லேவியா மாடல்களின் தொடர்ச்சியான பங்களிப்பும், மேலும் 20 நிமிடங்களுக்குள் முழுமையாக விற்றுத் தீர்ந்த உயர் செயல்திறன் மாடல் ஸ்கோடா ஆக்டோவியா ஆர்.எஸ். ஆகியவையும் வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளன.
இந்த முக்கியமான விற்பனை சாதனையைப் பற்றிக் கருத்து தெரிவித்த ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குநர் அஷிஷ் குப்தா கூறுகையில், இந்தியாவில் பிராண்டை மேலும் வலுப்படுத்தி வளர்ச்சியை வேகமாக்கும் நோக்கத்துடன் 2025 ஆம் ஆண்டை நாங்கள் தொடங்கினோம். ‘இதுவரை மிக அதிக விற்பனை’ என்ற இந்த சாதனை, எங்கள் நோக்கத்தின் வலிமை, கண்ணோட்டத்தின் தெளிவுத்தன்மை மற்றும் செயல்பாட்டில் விரைவுத்தன்மையை பிரதிபலிக்கிறது - இவை அனைத்தும் இந்தியாவில் எங்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகள் ஆகும். எங்கள் தயாரிப்பு முயற்சிகள், கலாசார ரீதியாக பொருத்தமான தொடர்பாடல், 318 வாடிக்கையாளர் டச்பாயிண்ட்கள் விரிவாக்கம், புதிய பிரதேசங்களில் வலுவான பங்களிப்பு ஆகியவை அனைத்தும் எங்கள் 25வது ஆண்டை இந்தியாவில் இதுவரை மிகப் பெரிய ஆண்டாக மாற்றியுள்ளன” என்றார்.
ஸ்கோடா தற்போது 200,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் தயாரிப்புப் கார்களை 180 நகரங்களில் 318 வாடிக்கையாளர் டச்பாயிண்ட்களுடன், ஸ்லேவியா, குஷாக் மற்றும் கைலாக் கார்களை விற்பனை செய்த மைல்கல்லை எட்டியுள்ளது. கைலாக், குஷாக் மற்றும் கோடியாக் மூலம் ஸ்கோடா இப்போது ஒவ்வொருவரின் விருப்பத்திற்கும் ஏற்ற எஸ்யுவிஐ வழங்குகிறது, அதே சமயம் ஸ்லேவியா மற்றும் ஆக்டோவியா ஆர்எஸ் -ஐ மீண்டும் கொண்டு வந்ததன் மூலம் தனது செடான் பாரம்பரியத்தையும் தொடர்கிறது.

0 கருத்துகள்