டாடா பவர் திறன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 2 புதிய பசுமைத் திறன் மையங்கள் தொடங்கப்பட்டன!

டாடா பவர் நிறுவனம் [Tata Power], தனது திறன் மேம்பாட்டுப் பிரிவான டாடா பவர் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் (Tata Power Skill Development Institute (TPSDII) மூலம், திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆகிய இடங்களில் இரண்டு சூரிய மின்சக்தித் திறன் மேம்பாட்டு மையங்களைத் (Solar Skill Centres of Excellence (SCoE)) திறந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அதன் பசுமை மின்சக்தி செயல்பாடுகளை அது விரிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகத்துடன் (DET) இணைந்து, அரசு - தனியார் ஒத்துழைப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்கள், மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சூழல் அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும். சான்றளிக்கப்பட்ட திறன் பயிற்சி பெற்றவர்களை இது தொடர்ச்சியாக உருவாக்கும். இது திருநெல்வேலியில் உள்ள டாடா பவர் நிறுவனத்தின் 4.3 ஜிகா வாட் சூரிய சக்தி செல் மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலையால் (solar cell and module manufacturing plant) அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பசுமை மின்திறன் மேம்பாட்டையும், அவற்றில் நிலையான வாழ்வாதாரங்களையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மையங்களை நிறுவுவதில் தமிழ்நாடு அரசின் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் டாடா பவர் நிறுவனம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.  இந்த மையங்கள் எதிர்காலத்திற்கு ஏற்ற, நிலையான எரிசக்தி அமைப்புகளில் திறன்களை மேம்படுத்தும். இதன் மூலம், இந்தியாவின் பசுமை எரிசக்தி தொலைநோக்குப் பார்வையையும், தூய எரிசக்தித் தொழில்நுட்பங்களில் தமிழ்நாட்டின் நிலையும் மேம்படும்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமார், டாடா பவர் சூரிய மின்சக்திப் பிரிவின் (டிபி சோலார்) தலைமைச் செயல் அதிகாரி திரு பார்த்தசாரதி பாலாஜி ஆகியோர் இணைந்து இந்த மையங்களைத் திறந்து வைத்தனர். பயிற்சித் துறை மண்டல இணை இயக்குநர் கே. கற்பகம், டாடா பவர் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பிரிவின் தலைமை மனிதவள அதிகாரி திருமதி அனுபமா ரட்டா, டாடா பவர் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் திரு அலோக் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் புதிய மையங்கள், திறன் பயிற்சி முதல் பயன்பாடு வரை ஒருங்கிணைந்த சூழல் அமைப்பை வலுப்படுத்தும். தமிழ்நாட்டிலும் அண்டை மாநிலங்களிலும் சூரிய மின்சக்தித் திட்டங்களின் செயல்பாடுகளை இது ஆதரிக்கும். அத்துடன், மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்பு, பயன்பாட்டு அளவிலான சூரிய சக்தி, செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்குத்  தேவையான உள்ளூர் அளவிலான பயிற்சி பெற்ற பணியாளர்களை இந்த மையங்கள் தயார்படுத்தும்.

இந்த இரண்டு மையங்களும் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுதல், அவற்றின் பராமரிப்பு, மின்சக்தித் திறன், மின் பாதுகாப்பு உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களில் நடைமுறை ரீதியான, தொழில்துறை சார்ந்த படிப்புகளை வழங்கும். சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுபவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், இத்துறையில் தொழில்முனைவோர் என பல்வேறு தரப்பினருக்கு உரிய தெளிவான பயிற்சிகளை இவை வழங்கும். இந்தப் பயிற்சித் திட்டங்கள் தேசிய தொழில் கல்வி மற்றும் பயிற்சிக் கவுன்சிலான என்சிவிஇடி (NCVET), தேசிய திறன் மேம்பாட்டுக் கழகமான என்எஸ்டிசி (NSDC) ஆகியவற்றின் தரநிலைகளுக்கு ஏற்ப மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் திட்டமான, பிரதமரின் சூரிய மின்சக்தி மேற்கூரை வீடுகள் திட்டத்தின் (PM Surya Ghar Muft Bijli Yojana) கீழ் வழங்கப்படுகின்றன. இதில் பயிற்சி பெறுபவர்கள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களைப் பெறுவார்கள். இது பொறியியல் - கொள்முதல் - கட்டமைப்பு (EPC) நிறுவனங்கள், இந்த துறைகளில் உள்ள நிறுவனங்கள், சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புக்கு உதவும். டாடா பவர் நிறுவனத்தின் மின் உற்பத்தி, திட்ட செயல்பாடு, பராமரிப்புப் பிரிவுகளிலும் வாய்ப்புகள் உள்ளன.  இது பயிற்சியாளர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதோடு இந்தியாவின் பசுமை எரிசக்திக்கான மாற்றத்தில் தீவிரமாகப் பங்களிக்கவும் உதவும்.

தொடக்கத்திலிருந்தே, டாடா பவர் திறன் மேம்பாட்டு நிறுவனமான டிபிஎஸ்டிஐ (TPSDI), மின்சக்தித் துறை தொடர்பான பயிற்சியில் மிகச்சிறந்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது. பசுமை மின்சக்தி, மின் அமைப்புகள், மின் பரிமாற்றம், மின் விநியோகம், மின் பாதுகாப்பு போன்றவற்றிலும், மென் திறன்களிலும், 200-க்கும் அதிகமான பயிற்சிப் படிப்புகளை வழங்குகிறது. இந்நிறுவனம் இதுவரை 3.75 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. 15 லட்சத்துக்கும் அதிகமான மனித நாட்கள் பயிற்சியை வழங்கியுள்ளது. இதில் பயிற்சி பெற்ற 50,000-க்கும் மேற்பட்டோர் ஏற்கெனவே சூரிய மின்சக்திப் பணிகளில் உள்ள குழுக்களைச் சேர்ந்தவர்கள். 18,000-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். தற்போது தமிழ்நாட்டின் பேட்டை, சாத்தூர் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ள மையங்கள், மாநிலத்தில் ஒரு பெரிய அளவிலான டாடா பவர் சூரிய மின் உற்பத்தி மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பு டாடா பவர் மின் உற்பத்தி நிறுவன தளங்கள், திட்ட தளங்கள், சேவை கட்டமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பணி செய்து உள்ளூர் அளவிலான திறன் பயிற்சியாளர்களை உருவாக்குகிறது. இது விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தி, பிரதமரின் சூரிய மின்சக்தி மேற்கூரை வீடுகள் திட்ட அமலாக்கத்தை விரைவுபடுத்தும்.

தமிழ்நாடு இப்போது டாடா பவர் நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலியில் முழுமையான, உலகத் தரம் வாய்ந்த சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்பைக் கொண்டுள்ளது. இது, 4.3 ஜிகா வாட் சூரிய மின்கல - மின்சக்தி உற்பத்தி வசதி (solar cell and module manufacturing plant), வலுவான திட்ட அமைப்பு, அரசு - தனியார் கூட்டு மாதிரியின் கீழ் அர்ப்பணிப்புள்ள பசுமைத் திறன் மையங்கள் ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சுயசார்புடன் கூடிய தூய எரிசக்திச் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான டாடா பவர் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை, இந்த திறன் பயிற்சி மையங்களின் திறப்பு விழா எடுத்துக் காட்டுகிறது. இது உள்நாட்டு உற்பத்தி, உள்ளூர் அளவில் திறன் மேம்பாடு, விரைவான வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கி, பசுமை எரிசக்தியின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதாக அமைகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu