வெரிட்டாஸ் பவுண்டேஷன் மற்றும் தமிழ்நாடு அரசின் கல்வித் துறையுடன் இணைந்து “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக பெரம்பலூரில் வெரிட்டாஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் சிஎஸ்ஆர் மூலமாக லாடபுரம் அரசு உயர்நிலை பள்ளியை புதுப்பித்து திறக்கப்பட்டுள்ளது.
வெரிட்டாஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் (“முன்னர் வெரிட்டாஸ் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது”) சிஎஸ்ஆர் பிரிவான வெரிட்டாஸ் பவுண்டடஷன், தமிழ்நாடு அரசு கல்வித்துறையின் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” செய்கையின் கீழ் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் அரசு உயர்நிலை பள்ளியை புதுப்பித்துள்ளது.
இப்பள்ளியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சுவா ஐ.ஏ.எஸ். திறந்து வைத்தார். கே.என்.அருண் நேரு எம்.பி., மற்றும் எம்.பிரபாகரன் எம்,எல்.ஏ., முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் டி.எஸ்.ஸ்ரீதர் (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., தலைவர், வெரிட்டாஸ் பவுண்டடஷன்) மற்றும் டி.அருள்மணி (நிறுவனர், நிர்வாக அறங்காவலர் மற்றும் வெரிட்டாஸ் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநர், சிஇஓ) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ், லாடபுரம் அரசு உயர்நிலை பள்ளியின் முழு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது. கட்டிடங்களின் ஸ்ட்ரக்சரல் ஸ்ட்ரெங்க்த்னிங், புதிய சுவர், மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், தானியங்கி ஃப்ளஷ் அமைப்புகள், சானிட்டரி நாப்கின்கள் எரிப்பதற்கான இன்சினரேட்டர்கள், புதிய வகுப்பறை உபகரணங்கள் போன்றவை வழங்கப்பட்டன.
வெரிட்டாஸ் ஃபைனான்ஸ் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதி உதவிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நிறுவனம் தற்போது 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் முழுவதும் 432 கிளைகள் கொண்டுள்ளது. 2.03 லட்சம் வாடிக்கையாளர்களை சேவையளித்து, ரூ.6,926 கோடிக்கும் மேற்பட்ட ஏயுஎம் உடன் செயல்பட்டு வருகிறது. சமூகத்தின் மேம்பாட்டிற்காக, வெரிட்டாஸ் ஃபைனான்ஸ் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை முக்கியமான பங்காக கொண்டுள்ளது.
விழாவில், வெரிட்டாஸ் பவுண்டடஷனின் நிறுவனர், நிர்வாக அறங்காவலர் மற்றும் வெரிட்டாஸ் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநர், சிஇஓ டி.அருள்மணி பேசுகையில், “வெரிட்டாஸ் சமூகத்திற்காக பணியாற்ற உறுதிபூண்டுள்ளது. இந்த சிஎஸ்ஆர் முயற்சி லாடபுரம் அரசு உயர்நிலை பள்ளியின் மாணவர்களுக்கு மேம்பட்ட உள்கட்டமைப்பு, உயர் தரமான சுகாதாரம், மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குவதில் உறுதியாக இருக்கும்” எனக் கூறினார்.
மேலும், வெரிட்டாஸ் பவுண்டடஷன் விரைவில் அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்காக கல்வி உதவித்தொகை திட்டம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த உதவித்தொகை, பொருளாதாரத்தில் பின்னடைந்த மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த திட்டத்துடன் இணைந்து, வெரிட்டாஸ் கடந்த நிதியாண்டில் ரூ.1 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை வழங்கியுள்ளது. மேலும், சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சிகள் மூலம் 858 பயனாளர்கள் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
0 கருத்துகள்