கடையம்பெரும்பத்தில் உயர்கோபுர விளக்கு: எம்.பி.யிடம் கோரிக்கை

 கடையம்பெரும்பத்து ஊராட்சியில் 4 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென ராபர்ட் புரூஸ் எம்.பி.யிடம் பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கடையம்பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன், நெல்லை எம்.பி.ராபர்ட் புரூசை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கடையம்ஊராட்சி ஒன்றியம், கடையம்பெரும்பத்து ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 4 இடங்களில் உயர்கோபுரமின்விளக்குகள் அமைக்க வேண்டிள்ளது. அதன்படி வெய்க்காலிபட்டி பிள்ளையார் கோவில் முன்பு, சபரி நகர் ரெயில்வே கேட் மேல்புறம், மேட்டூர் சர்ச் முன்பு, தோரணமலை கோவில் அருகில் ஆகிய 4 இடங்களில் உயர்கோபுர மின் விளக்கு அமைத்திட பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, நிறைவேற்றித்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu