ஆலங்குளத்தில் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமினை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதியுதவியுடன், ஆலங்குளம் அரிமா சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய 221 வது இலவச கண் சிகிச்சை முகாம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் தலைமை வகித்தார். அரிமா சங்க தலைவர் திருமலை செல்வம், செயலாளர் வில்லியம் தாமஸ், பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கசெல்வம் வரவேற்றார். முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அரிமா சங்கத்தைச் சேர்ந்த ஆதித்தன் , உதயராஜ் , பாப்புலர் செல்லத்துரை, ஜெயராஜ், கிருஷ்ணன், முருகன், செல்வம், பால சுப்பிரமணியன், செல்வகுமார், பெரியாண்டவர் , வைத்திலிங்கம் (எ) ராஜ் மற்றும் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, நகர செயலாளர் நெல்சன், துணை செயலாளர் சுதந்திரராஜன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம், முன்னாள் கவுன்சிலர் மோகன்லால், ஒன்றிய திமுக இளைஞரணி அரவிந்த் திலக், முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் (எ) தினேஷ், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், ப்ரியா மகேஷ், சோனா மகேஷ், நெப்போலியன், பொன்மோகன், சிவனேஷ், இளைஞர் காங்கிரஸ் லெனின், நகர துணைத்தலைவர் யேசுராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்