கீழப்பாவூரில் இலவச புற்றுநோய்- கண் மருத்துவ முகாம்

கீழப்பாவூரில் நடைபெற்ற இலவச புற்றுநோய் மற்றும் கண் மருத்துவ முகாமினை பேரூராட்சி  தலைவர் பி.எம்.எஸ். ராஜன் தொடங்கி வைத்தார்.

உலக ஹாஸ்பைஸ் மற்றும் பேலியடிவ் கேர் தினத்தை யொட்டி சீட்ஸ் பேலியேடிவ் கேர், தென்காசி புரோ விஷன் கண் மருத்துவமனை, மெடிக்ளோன் இரத்த ஆய்வகம் மற்றும் விடியல் மெடிக்கல் மிஷன் இணைந்து நடத்திய  இலவச புற்றுநோய் மற்றும் கண் சிகிச்சை முகாம் கீழப்பாவூரில் நடைபெற்றது.

ஏ.வி.உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமினை பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். சீட்ஸ் பேலியேடிவ் கேர் நிறுவனர் அபிலாஷ் பிரவீன், புரோ விஷன் கண் மருத்துவமனை நிர்வாகி அஜந்த் நவீன், கண் மருத்துவர் ராஜகுமாரி, மெடிக்ளோன் நிறுவனர் கேப்ரியல், விடியல் மெடிக்கல் மிஷின் நிர்வாகி ஜெபசிங் ராஜ்  திமுக மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி, நிர்வாகிகள் சீனிபாண்டி, மாடசாமி, பிரம்மநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

முகாமில்  விழித்திரை பரிசோதனை,  அதி நவீன கண் ஸ்கேன், கண் கண்ணாடிகள் மற்றும்  ஈ..சி.ஜி., ரத்த பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் பங்கேற்று பயன்பெற்றனர். ஏற்பாடுகளை பெர்சி ஜெபமலர் லெகசி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu