மேலகரம் பேரூராட்சி 11வது வார்டில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து பேரூராட்சி கவுன்சிலர் நாகராஜ் எம்.சரவணார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேரூராட்சி 11வது கவுன்சிலர் நாகராஜ் எம்.சரவணார் பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மேலகரம் பேரூராட்சி 11வது வார்டுக்குட்பட்ட அன்பு நகரில் தென் வடல் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இரவில் நடப்பதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே அப்பகுதியில் புதிதாக தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். அன்புநகர் உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் நுழைவு வாயிலில் பெயர் பலகை அமைத்து தர வேண்டும். அன்பு நகர் மற்றும் அம்மன் நகர் இணைப்பு புதிய சாலை அமைத்து தர வேண்டும். இப்பகுதியில் முழுவதுமாக கழிவு நீர் ஓடை அமைத்து வேண்டும்.
மேலும் அம்மன் நகர் திரும்பும் முனையில் ரோட்டில் கீழ்பக்கம், பிள்ளையார் கோவில் கோவில் தெருவில் ஆத்மன் வீடு அருகில், தென்வடல் தெரு திரும்பும் முனையில் கீழ் மற்றும் மேல் பக்கம், ராமர் கோவில் தெருவில் கருப்பையா வீடு முன்பு ஆகிய பகுதியில் உள்ள குடிநீர் குழாய் திறக்கும் வால்வை சுற்றி தொட்டி கட்டி, இரும்பினால் ஆன மூடி அமைத்திட வேண்டும்.
இதே போல் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சின்டெக்ஸ் மின் மோட்டார் பழுது ஏற்பட்டு சின்டெக்சில் நீரேற்றம் செய்யாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மின்மோட்டாரை பழுது பார்த்த நிலையில், நீர் மூழ்கி மோட்டார் மண் சரிந்து சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அதனை சரி செய்திட வேண்டும்.
மேலும் அன்பு நகரில் பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றை தூர்வாரி கிணற்றின் மேல் இரும்பினால் ஆன மூடி அமைத்திட வேண்டி 15வது நிதிக்குழு மானியம் 2வது தவணை திட்டத்தில் 2022-23ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இப் பணியில் துர்வாருதல் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. அதிலும் பிளிச்சிங் பவுடர் போடவில்லை. இக்கிணற்றிலும், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள கிணற்றிலும் தூர்வாரும் பணி மட்டுமே நடந்துள்ளது. 2 கிணற்றிற்கு மேல் மூடி அமைத்திட வேண்டும். மேலும் வார்டு பகுதியில் 3 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே மேற்படி அன்புநகர் கிணற்றில்உள்ள நீரை உரிய பரிசோதனைக்கு உட்படுத்தி தினசரி குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்