பாவூர்சத்திரம் ஒளவையார் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

பாவூர்சத்திரம் ஒளவையார் பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை பழனிநாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் பேராசியர் சாக்ரடீஸ், யூனியன் துணை சேர்மன் முத்துகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை ஜெகதா வரவேற்றார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 307 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

விழாவில் ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் கபில்தேவதாஸ், பெரியார் திலீபன், ஆனந்த், காங்கிரஸ் வட்டார தலைவர் குமார்பாண்டியன், நகர தலைவர் குமரேசன் (எ) சிங்ககுட்டி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வடக்கு வாச்செல்வி, துணைத்தலைவர் ரோஜா மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள். ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். 

உதவி தலைமை ஆசிரியர் சிவ பார்வதிநாதன் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu