சென்னையில் Forum of Digital Politics நடத்திய டிஜிட்டல் அரசியல் கருத்தரங்கு

சென்னையில் Forum of Digital Politics அமைப்பு சார்பில் டிஜிட்டல் அரசியல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அலுவலக அரங்கத்தில் நடைபெற்ற இந்த மினி கருத்தரங்கில் 35க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசியலில் டிஜிட்டல் குறித்து கலந்துரையாடினர்.

மாறிவரும் தொழில்நுட்ப உலகில் எல்லா துறைகளும் டிஜிட்டல்மயமாகி வருவது போல, அரசியலுக்கும் டிஜிட்டல் அத்தியாவசியம் ஆகிறது. அரசியலில் இருக்கும் டிஜிட்டல் வெற்றிடத்தை நிரப்பும் வகையிலும், அரசியல் கட்சிகள், அரசியல் பிரமுகர்களுக்கு டிஜிட்டல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், தேவைக்கேற்ப டிஜிட்டல் சேவைகளைச் செய்யும் வகையில் ஃபோரம் ஆஃப் டிஜிட்டல் பாலிடிக்ஸ் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் தேசிய செயலாளராக தேடல் ஆனந்தன் செயல்பட்டு வருகிறார்.

டிஜிட்டல் பாலிடிக்ஸ் ஃபோரம் சார்பில் மினி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான அறிவிப்புகள், அழைப்பு என அனைத்துமே டிஜிட்டல் மூலமாகவே செய்யப்பட்டது. இந்த கருத்தரங்கில் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து 35க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், ஆலோசகர்கள், மாணவர்கள், நிபுணர்கள் என பல தரப்பட்டோர் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் பொலிட்டிக்கல் டெக் (PoliticalTech) துறையில் புதுமைகளை உருவாக்குவது, செயல்படுத்துவது, அரசியலில் டிஜிட்டல் போன்ற விசயங்கள் குறித்து கலந்துரையாடப் பட்டது.

கருத்தரங்கில் ஃபோரம் ஆப் டிஜிட்டல் பாலிடிக்ஸ் தேசிய செயலாளர் தேடல் ஆனந்தன் பேசுகையில், அரசியல் நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். குறிப்பாக டிஜிட்டல் நிர்வாகம், அரசியல் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான தரவுப் பரிசோதனையின் (Data Analytics) ஒழுங்கு முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார். தேர்தல்களில் டிஜிட்டலின் முக்கியத்துவம் என்ன என்பதையும், எதிர்காலத்தில் டிஜிட்டலின் தேவை மிக முக்கியம் என்பதையும் விரிவாக விளக்கிப் பேசினார்.

இந்த கருத்தரங்கு. பல்துறையில் இருந்து வந்தவர்களுக்கிடையே அறிவுப் பரிமாற்றம் நிறைந்த நிகழ்வாக அமைந்தது. அரசியல் ஆலோசகர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். மாணவர்கள் பொலிட்டிக்கல் டெக் துறையில் உருவாகும் புதிய போக்குகள் மற்றும் வாய்ப்புகளை ஆராய்ந்தனர். அரசியல் பிரச்சாரங்களில் டிஜிட்டலை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வு, அரசியல் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து ஆழ்ந்த விவாதங்களுக்கான ஒரு மேடையாகவும், நாட்டின் அரசியல் ஈடுபாடு மற்றும் நிர்வாகத்தின் எதிர்காலத்தை மேம்படுத்த புதிய முயற்சிகளுக்கான அடித்தளமாகவும் அமைந்தது. டிஜிட்டல் அரசியல் மன்றம் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அரசியலில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து தொடர்ந்து உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் தேவையை வலியுறுத்தியது.

கருத்தரங்கு முடிவில் அனைவருக்கு நன்றி தெரிவித்துப் பேசிய தேடல் ஆனந்தன், சென்னையில் நடந்தது போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் மினி கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu