டேலி MSME ஹானர்ஸ் 4வது பதிப்பின் வெற்றியாளர்கள் அறிவிப்பு

உலகளவில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான புதுமையான தீர்வுகளை வழங்கு முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் டேலி சொல்யூஷன்  ஆகும். இந்நிறுவனமானது,  இந்தியா முழுவதும் 'எம்.எஸ்.எம்.இ ஹானர்ஸ் நிகழ்வின் நான்காவது பதிப்பின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. டேலி எம்.எஸ்.எம்.இ ஹானர்ஸ் நிகழ்வினை டிபிஎஸ்  வங்கி மற்றும் மேக் மை ட்ரிப் வழங்கும் மைபிஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் இணைந்து இந்தியா முழுவதும் 100 எம்.எஸ்.எம்.இ-களை அங்கீகரித்துள்ளது. அதன்படி, மதுரையைச் சேர்ந்த கப் டைம் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.  இந்த ஆண்டு 19,000+ உலகளாவிய நாமினேஷன்களிலிருந்து இந்த வெற்றியை நிறுவனம் பதிவு செய்துள்ளது.

கப் டைம் நிறுவனத்தைச் சேர்ந்த பிரபாகரன் வேணுகோபால் ‘நியூ ஜெனரல் ஐகான்’ பிரிவில் கௌரவிக்கப்பட்டார்.  இது மதுரையின் பாரம்பரியமிக்க  வடிகட்டி காபி மற்றும் தேநீர் வழங்கும் நிறுவனமாகும்.   ஸ்டார்ட்அப் தமிழ்நாடு-இலிருந்து ரூ. 10,00,000 மற்றும் எம்எபிஐஎஃப் இலிருந்து ரூ. 25,00,000 ஈக்விட்டி உள்ளிட்ட மானியங்களால் ஆதரிக்கப்பட்டு, ஸ்டார்ட்அப் இந்தியா விதை நிதித் திட்டத்திலிருந்து ரூ. 30,00,000 பெற உள்ளது, கப் டைம் தனது வணிக மாதிரியை கிளவுட் கிச்சன்கள் மூலம் மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்துகிறது.  தரம் மற்றும் பாரம்பரியத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு கோப்பையையும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றுகிறது.

நாட்டின் நான்கு மண்டலங்களில் (கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு) கொண்டாடப்படும் இந்த விருதுகள் தொழில்துறையில் உச்சம் தொட சவால்களை வென்ற சாதனைப் பெண்களை அங்கீகரிக்கும் ’வொண்டர் வுமன்’ , நீடித்த வெற்றிக்கான அடித்தளத்தை அமைப்பவர்களுக்கான பிசினஸ் மேஸ்ட்ரோ விருது, வளர்ச்சிக்கான புதிய பாதைகளை உருவாக்கும் நபருக்கான புதிய ஜெனரல் ஐகான் விருது, தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ள வணிகங்களை கௌரவிக்கும் டெக் டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் எம்எஸ்எம்இ- களின் உலகளாவிய நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் சாம்பியன்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் சாம்பியன் ஆஃப் காஸ் என 5 பிரிவுகளில் வழங்கப்பட்டன.

டேலி எம்எஸ்எம்இ ஹானர்ஸ் என்பது தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்களிக்கும் மரியாதைக்குரிய வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோரை அங்கீகரிப்பதற்கான வருடாந்திர முன்முயற்சியாகும். எம்எஸ்எம்இகளின் பன்முகத்தன்மை மற்றும் நேர்மறையான தாக்கத்தோடு அடிமட்டத்திலிருந்து மேற்கொள்ளப்படும்  சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றுக்காக நிறுவனங்களை  அங்கீகரித்து கொண்டாடுவதே ஹானர்ஸ் நிகழ்வின் அடிப்படையாகும்.டேலி மேற்கொள்வதற்கான சிறப்புமிக்க இத்தளமானது,  புகழ்பெற்ற நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகிறது. எம்எஸ்எம்இ ஹானர்ஸ் என்பது, நகரங்கள், பிரிவுகள் என அடுக்குகளில் உள்ள உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் மற்றும் பொருளாதாரத்தை உந்தும் புகழ் பெறாத ஹீரோக்கள் கொண்டாடப்படுவதை உறுதிசெய்யும் ஒரு உள்ளடக்கிய அங்கீகார தளமாக உள்ளது என்பதற்கு இது ஒரு உண்மையான சான்றாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu