முன்னணி தொழில்நுட்பப் பிராண்டுகளான ManageEngine, Zoho.com, TrainerCentral, Qntrl ஆகியவற்றின் தாய் நிறுவனமான Zoho <https://www.zohocorp.com/>, இன்று இந்தியாவில் <https://www.zakya.com/en-in/> (Zakya) என்ற ஒரு புதிய பிராண்டை அறிமுகப் படுத்துவதாக அறிவித்தது. ஜாக்யா ஒரு நவீன POS சாப்ட்வேர். ஜாக்யா சாப்ட்வேர் சிறிய மற்றும் நடுத்தர ரீடைல் வணிகங்கள் தங்கள் அன்றாடச் செயல்பாடுகளை நெறிப்படுத்த உதவுகிறது. ரீடைல் (சில்லறை விற்பனை) ஸ்டோர்கள் ஜாக்யாவை ஒரு மணி நேரத்திற்குள் செயல்படுத்தி பில்லிங் தொடங்கலாம்.
மேலும், இவ்வருட பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகளை ஜாக்யா அறிவித்தது. இதில் 1,040 வணிகங்கள் கலந்து கொண்டன. POS சாப்ட்வேருடைய பயன்பாடு மற்றும் இந்திய எஸ்எம்பிகளில் அதனால் ஏற்படும் தாக்கத்தின் அளவைக் கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பதிலளித்தவர்களில் 39% பேர் மட்டுமே தங்கள் பில்லிங் செயல்பாடுகளுக்கு POS சாப்ட்வேரைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில், POS-ஐ பயன்படுத்தாதவர்களில் 95% பேர் 2029ஆம் ஆண்டிற்குள் அதை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினர்; மேலும், பயன்படுத்த விரும்பும் வணிகங்களில், 75% பேர் POS சாப்ட்வேர் பயன்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் எளிமையாக இருப்பது முக்கியம் என்று கூறியுள்ளனர்.
"இந்த டிஜிட்டல் யுகத்தில், சில்லறை விற்பனையாளர்கள் போட்டித் தன்மையுடன் இருக்க தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவேண்டும். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு தனிச்சிறப்பு வாய்ந்த அனுபவத்தை வழங்க வேண்டும். இந்தியாவில் தற்போது POS சாப்ட்வேர் பயன்பாடு குறைவாக இருப்பதாக ஜாக்யா ஆய்வு காட்டுகிறது. பதிலளித்தவர்களில் 61% பேர் பண இரசீதுகள், ஸ்ப்ரெட்ஷீட்டுகள் போன்ற வழக்கமான செயல்பாடுகளை இன்னும் நம்பியிருக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில், POS சாப்ட்வேரை வணிகங்கள் பயன்படுத்த தயங்குகின்றன, ஏனெனில் தற்போது கிடைக்கும் சாப்ட்வேர்களில் போதுமான அம்சங்கள் இல்லை, அல்லது அவை பயன்படுத்த சிக்கலானதாக உள்ளன. இந்த இடைவெளியை வலுவான ஆன்லைன் POS சாப்ட்வேர் மூலமாக ஜாக்யா தீர்க்கிறது. அதுமட்டுமின்றி, ஜாக்யா வணிகங்கள் பயன்படுத்த மற்றும் நிர்வகிக்க எளிதாக இருக்கும்," என்று ஜாக்யாவின் தலைமை செய்தியாளர் ஜெயகோபால் தெரனிகல் கூறினார்.
"ஜாக்யா" என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான "சாக்யா" என்பதிலிருந்து பெறப்பட்டது, இதற்கு தமிழில் "சாத்தியம்" என்று பொருள். முழுமையாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள ஜாக்யா, வணிகங்களுக்கு விரிவான நவீன POS சாப்ட்வேரை வழங்குகிறது. விற்பனையாளர்களுக்கான மொபைல் பில்லிங் ஆப் (APP) இதில் அடங்கும். தங்கள் மொபைல்களில் இருந்து, அதிக வர்த்தகம் செய்யும் நேரத்தில், இணையாக பில்லிங் செய்யத் தொடங்கி, நீண்ட வரிசையைக் குறைக்க இந்த ஆப் உதவும். ஸ்டோர் உரிமையாளர்கள் தங்கள் சொந்த ஆப்களைத் தொடங்கலாம், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் இருந்து பொருட்களை வாங்குவதற்கும், டெலிவரி செய்வதற்கும் அல்லது ஸ்டோரில் நேரடியாக பிக்-அப் செய்வதற்கும் ஏற்பாடு செய்யலாம். ஸ்டோர் உரிமையாளர்கள் தங்கள் விற்பனை மற்றும் சரக்கு பற்றிய அனைத்து தகவலையும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடைகளில் இருந்து ஒரே இடத்தில் மைய நிர்வாகப் பணியகத்தில் (சென்ட்ரல் அட்மின் கன்சோலில்) பார்க்கலாம். பரிவர்த்தனைகள், சரக்குகள் போன்றவற்றைப் பற்றிய நிகழ்நேர பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி வணிக உட்பார்வைகளைச் சேகரிக்கலாம். தமிழ், இந்தி, தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி போன்ற பல இந்திய மொழிகளில் ஜாக்யாவை பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர்களுக்கு வசதியை வழங்குவதற்காக பைன் லேப்ஸ் (Pine Labs), ரேஸர்பே (Razorpay), போன்பே (PhonePe) உள்ளிட்ட பணம் செலுத்தும் கூட்டாளர்களுடன் ஜாக்யா முன்பே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் ஆர்டர்களை டெலிவரி செய்வதற்கு ஆஃப்டர்ஷிப் (AfterShip) மற்றும் ஈஸிபோஸ்ட் (EasyPost) போன்ற ஷிப்பிங் கூட்டாளர்களுடன் ஜாக்யா ஒருங்கிணைக்கப்படலாம். டுவிலியோ (Twilio) உடனான ஒருங்கிணைப்பு மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு SMS அறிவிப்புகளை ஸ்டோர்கள் அனுப்ப ஜாக்யா அனுமதிக்கிறது. அதே நேரத்தில் வாட்ஸ்அப் (WhatsApp) உடனான ஒருங்கிணைப்பு மூலமாக ஸ்டோர்கள் சிஸ்டத்தில் இருந்து இன்வாய்ஸ்கள், விற்பனை ஆர்டர்கள், கட்டண இரசீதுகளுக்கான செய்திகளை நேரடியாக அனுப்ப ஜாக்யா அனுமதிக்கிறது. மேலும், ஜாக்யா கணக்குப்பதிவுக்கான சாப்ட்வேர் ஆகிய Zoho Books, ஆன்லைன் ஸ்டோர்களுக்கான சாப்ட்வேர் ஆகிய Zoho Commerce போன்ற பிற வணிக சாப்ட்வேர்களுடன் ஒருங்கிணைக்கிறது.
இந்தியாவின் சில்லறை விற்பனை துறை <https://www.investindia.gov.in/sector/retail-E-commerce> இருப்பதால், இந்தத் தொழில்துறையின் டிஜிட்டல் தேவைகள், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, வளரும். ஒரு கடை முதல் பல்வேறு ஸ்டோர்கள் கொண்ட சில்லறை விற்பனையாளர்கள் வரை ரீடைல் எஸ்எம்பி-களின் (Retail SMBs) தேவைகளை நிவர்த்தி செய்ய ஜாக்யா நிர்வகிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாக்பூர், புனே, ஔரங்காபாத், பந்தவ்கர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில் மற்றும் பிற இடங்களில் உள்ள 170+ ஸ்டோர்கள் ஜாக்யாவை பயன்படுத்துகின்றன.
ஜாக்யா ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகள்
- POS சாப்ட்வேர் பயன்பாடு தற்போது குறைவாக உள்ளது, ஆனால் விரைவாக அதன் பயன்பாடு அதிகரிக்கும் - பதிலளித்த வணிகங்களில் 39% பேர் மட்டுமே தங்கள் பில்லிங் செயல்பாடுகளுக்கு POS சாப்ட்வேரைப் பயன்படுத்துகின்றனர். மறுபுறம் 48% பேர் இன்னும் ரொக்கப் பில்கள் போன்ற கைமுறை செயல்பாடுகளை நம்பியுள்ளனர், மீதமுள்ள 13% பேர் தங்கள் கணக்குப்பதிவு மற்றும் சரக்கு மேலாண்மை தேவைகளை நிர்வகிக்க எக்ஸெல் (Excel) போன்ற ஸ்ப்ரெட்ஷீட்டுகளைப் பயன்படுத்துகின்றனர். POS சாப்ட்வேரைப் பயன்படுத்தாதவர்களில், 95% பேர் 2029-க்குள் POS சாப்ட்வேரைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறுகிறார்கள். அதில் 56% பேர் அடுத்த 6 மாதங்களில் POS சாப்ட்வேரைப் பயன்படுத்தத் திட்டம் இருப்பதாக கூறியுள்ளனர்.
- வணிகங்கள் பயன்படுத்தவும் நிர்வகிக்கவும் எளிதான POS சாப்ட்வேரை விரும்புகின்றன - 2029ஆம் ஆண்டுக்குள் POS சாப்ட்வேரைப் பயன்படுத்த விரும்பும் வணிகங்களில் 75% பேர், POS சாப்ட்வேர் பயன்படுத்துவதற்கும் நிர்வகிக்கவும் எளிதாக இருப்பது முக்கியமான அம்சம் என்று கூறினர். வணிகங்கள் கூறிய இரண்டாவது மற்றும் மூன்றாவது முக்கிய அம்சங்கள் "விலை-பயன்திறன்" மற்றும் "மொபைல் பில்லிங்" ஆகும்.
- வணிகங்கள் தங்கள் ஆண்டு வருவாய் அதிகரிக்கும்போது POS சாப்ட்வேரை விரும்புகின்றன - வணிகங்கள் வளரும்போது, அவற்றின் செயல்பாடுகள் அதிகரிக்கும்போது, தெளிவான செயல்முறைகளை நிறுவவும் செயல்பாடுகளை சிறப்பாக நிர்வகிக்கவும் POS சாப்ட்வேரை நாடுகிறார்கள்.
- ஆண்டுக்கு 5 கோடிக்கும் குறைவாக வருமானம் கொண்ட வணிகங்கள், வழக்கமான பில்லிங் முறைகளை அதிகம் நம்பியிருக்கின்றன. 24% மட்டுமே தங்கள் பில்லிங் செயல்பாடுகளுக்கு POS சாப்ட்வேரைப் பயன்படுத்துகின்றன. மீதமுள்ள 76% வணிகங்கள் இன்னும் ரொக்கப் பில்கள், கைமுறை இரசீதுகள் மற்றும் சரக்கு ஸ்ப்ரெட்ஷீட்டுகளைப் பயன்படுத்துகின்றன.
- 5-10 கோடி ஆண்டு வருவாய் கொண்ட வணிகங்களில், 55% வழக்கமான பில்லிங் முறைகளையும் சரக்குகளுக்கான ஸ்ப்ரெட்ஷீட்டுகளையும் பயன்படுத்துகின்றன. மறுபுறம், 45% வணிகங்கள் POS சாப்ட்வேரைப் பயன்படுத்துகின்றன.
- 11-20 கோடி ஆண்டு வருவாய் கொண்ட 48% வணிகங்கள் தங்கள் பில்லிங் மற்றும் சரக்கு மேலாண்மை செயல்பாடுகளை நிர்வகிக்க POS சாப்ட்வேரைப் பயன்படுத்துகின்றன. மேலும், 21-50 கோடி ஆண்டு வருமானம் கொண்ட வணிகங்களில், 26% மட்டுமே கைமுறை பில்லிங் முறைகள், ஸ்ப்ரெட்ஷீட்டுகளைப் பயன்படுத்துகின்றன.
- POS சாப்ட்வேரை ஏற்றுக்கொண்ட பிறகு வணிகங்கள் வருவாயில் அதிகரிப்பைக் காண்கின்றன - POS சாப்ட்வேரை ஏற்றுக்கொண்ட பிறகு வருவாய் அதிகரித்ததா என்று வணிகங்களிடம் கேட்டபோது, POS சாப்ட்வேரைப் பயன்படுத்துபவர்களில் 98% பேர் “ஆம்“ என்று தெரிவித்தனர். “ஆம்“ என்று கூறிய வணிகங்களில், 37% பேர் தங்கள் வருவாயில் 20-40% அதிகரிப்பைக் கண்டதாகக் கூறியுள்ளனர், மேலும் 27% பேர் 40-60% அதிகரிப்பைக் கண்டதாகக் கூறியுள்ளனர்.
- POS சாப்ட்வேர் வணிகங்களுக்கு நேரத்தைச் சேமிக்க உதவுகிறது - POS சாப்ட்வேரைப் பயன்படுத்தும் 67% வணிகங்கள், அதை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் எளிதாக சேமிக்கிறார்கள். இது, டிஜிட்டல் சாப்ட்வேர்கள் எவ்வாறு செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த உதவுகின்றன என்பதைக் காட்டுகின்றன.
"ஜாக்யா காகிதமில்லாத சூழலாக மாற்றுவதன் மூலம் டிஜிட்டல் மயமாக்கலை எளிதாக்கியது மட்டுமின்றி, அதை உரிமையற்றதாக மாற்றுவதற்கும் பங்களித்துள்ளது. இப்போது, எனது வணிகம் என்னை மட்டுமே சார்ந்து இல்லை. எங்கள் முதல் ஸ்டோரை நிறுவிய முதல் ஒன்றரை மாதத்திற்குள், நாங்கள் தனிச்சிறப்புவாய்ந்த 500% ROI-யைக் காண முடிந்தது, இப்போது நாங்கள் எங்கள் அடுத்த ஸ்டோரைத் திறக்கத் தயாராக உள்ளோம்."
- சுபாஷினி, இணை நிறுவனர், வானவ் எண்டர்பிரைசஸ் (Wanaw Enterprises)
பொறுப்புத் துறப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வர்த்தக முத்திரைகள், தயாரிப்பு பெயர்கள் மற்றும் நிறுவனத்தின் பெயர்கள் அந்தந்த உரிமையாளர்களின் சொத்து ஆகும்.
விலை விவரங்கள்
ஜாக்யா உடனடியாக பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. வழக்கமான திட்டம் (Standard plan) மாதத்திற்கு ₹649-இல் தொடங்குகிறது, ஆண்டிற்கு ஒரு முறை பில் செய்யப்படும். ஜாக்யா15 நாள் இலவச சோதனைக்கும் கிடைக்கிறது. இந்த சாப்ட்வேர் தனிப்பட்ட பயனர்களுக்கு என்றென்றும் இலவசமான திட்டத்தை வழங்குகிறது, இதில் கவுன்டர் பில்லிங் ஆப்ஸ், விற்பனை மேலாண்மை, கொள்முதல் மேலாண்மை, சரக்கு மேலாண்மை, மற்றும் ஷிப்பிங் போன்ற பல தேவையான அம்சங்கள் உள்ளன. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து பார்க்கவும்: <https://www.zakya.com/en-in/pricing.html>

0 கருத்துகள்