தநைரா ஓசூரில் தனது முதல் விற்பனை நிலையத்தைத் திறந்துள்ளது

டாடா  தயாரிப்பைச் சேர்ந்த தநைரா, ஓசூரில் தமது முதல் விற்பனை நிலையத்தையும், மாநிலத்தில் ஏழாவது விற்பனை நிலையத்தையும் தொடங்கி இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தமது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. ஓசூர் நகரத்தின் புடவை ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக, இந்த விற்பனை நிலையம் அமைந்துள்ளது. 3137 சதுர அடியில் 2897 சதுர அடி பரப்பளவில் பிரத்யேக சில்லறை விற்பனைதள பிரிவுடன் இது அமைந்துள்ளது. "பிளாட் எண் 20 (பி), எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் எஸ்டேட், பைபாஸ் சாலை" [Plot no. 20 (P), Electrical And Electronic Estate, By Pass Road] என்ற முகவரியில் ஓசூரில் அமைந்துள்ள இந்த விற்பனை நிலையம், டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் மேலாணமை இயக்குனர் திரு சி.கே.வெங்கட்ராமன் [Mr. CK Venkataraman, Managing Director, Titan Company Limited]  மற்றும் தநைரா தலைமைச் செயல் அதிகாரி திரு அம்புஜ் நாராயண் [Mr. Ambuj Narayan, CEO, Taneira] ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

இரண்டு தளங்களில் அமைந்துள்ள இந்த விற்பனை நிலையத்தின் உட்புறங்கள் நேர்த்தியான சுவரோவியங்கள் மற்றும் சிக்கலான வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டு, அதன் கவர்ச்சியையும் தனித்துவத்தையும் மேம்படுத்துகின்றன. தரைத் தளம் கையால் செய்யப்பட்ட ஆத்தங்குடி பளிங்கு கற்களால் அலங்கரிக்கக்பட்டுள்ளது.  முதல் தளத்தில் ஒரு பிரத்யேக திருமண ஜவுளிப் பிரிவு உள்ளது. இது பாரம்பரிய பழங்கால செட்டிநாடு பாணியில்  அமைந்துள்ளது. இந்த விற்பனை நிலையம் ஓசூர் நகரத்தின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. இந்திய நெசவுகளின் வளமான தொகுப்பை தேர்வு செய்ய ஆரவலர்களை இது அழைக்கிறது. நாட்டின் மாறுபட்ட ஜவுளி மரபுகளை இந்த விற்பனை நிலையம் கொண்டாடுகிறது.

தெளிவான மற்றும் நேர்த்தியான சூழலுடன், உள்ள இந்த விற்பனை நிலையம் பாரம்பரிய மற்றும் தற்கால ரகங்களின் மிக நேர்த்தியான கலவையாக அமைந்துள்ளது. இது நெசவாளர்கள், கைத்தறிப் புடவைகள், ரவிக்கைகள் (பிளவுஸ்), ஆயத்த உடைகள், அணியத் தயாராக உள்ள மற்றும் தைக்கப்படாத குர்தா செட்கள் போன்றவற்றை வழங்குகிறது. இந்த விற்பனை நிலையம், தூய மற்றும் இயற்கை அம்ச துணி வகைகளை ஓசூரின் விவேகமான வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. காஞ்சிபுரம் பட்டு, தென் மாநில பட்டுகள், வேகன் எனப்படும் சைவ துணி வகைகள், தூய பனாரஸ் பட்டு, பருத்தி மற்றும் பட்டு பருத்தி போன்ற பிராந்திய ஜவுளி ரகங்களை ஒரே குடையின் கீழ் வழங்குவதன் மூலம் இந்தியாவின் மாறுபட்ட ஜவுளி மற்றும் வளமான கைவினைத்திறனை தநைரா கொண்டாடுகிறது. ஒப்பிடமுடியாத வெளிப்படைத்தன்மையுடன் ஒவ்வொரு தூய ஜரிகை காஞ்சிபுரம் புடவையும் நம்பகத்தன்மையின் சான்றிதழுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நேர்த்தியான கைத்தறி நெசவின் காலம் கடந்த பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறது.

டைட்டன் கம்பெனி லிமிடெட் மேலாண்மை இயக்குநர் சி.கே.வெங்கட்ராமன் (CK Venkataraman, Managing Director, Titan Company Limited) பேசுகையில், "பாரம்பரியத்தை புதுமையுடன் இணைப்பதன் மூலம், தநைரா நிறுவனம் புடவை நெசவில் உள்ள காலத்தால் அழியாத கலையை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. நவீனத்துவத்தைத் தழுவும் அதே நேரத்தில் நமது பாரம்பரியத்தை மதிக்கும் ஒரு அம்சத்தை இது தழுவுகிறது. நாங்கள் எங்கள் பிராண்ட் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம். நம்பகத்தன்மை மற்றும் பலவகை வடிவமைப்பு என்ற தூண்களைக் கொண்டுள்ள தநைரா, இந்திய கைவினைத்திறனைப் பாதுகாப்பதற்கும் கொண்டாடுவதற்கும் உறுதிபூண்டுள்ளது." என்றார்.

தநைராவின் தலைமைச் செயல் அதிகாரி அம்புஜ் நாராயண் (Ambuj Narayan, CEO, Taneira) கூறுகையில், "ஓசூரில் புதிய தநைரா விற்பனை நிலையத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த துடிப்புமிக்க பிராந்தியத்தில் எங்கள் தடத்தை விரிவுபடுத்துகிறோம். இந்த அறிமுகம் எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.  இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, நேர்த்தியான கைவினை, கைத்தறிப் பொருட்களின் தொகுப்பை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு  வழங்கும். இந்திய ஜவுளிகளின் மிகச்சிறந்த கைவினைத்திறன் மற்றும் கலைத்திறனை வழங்கும் இந்த விற்பனை நிலையம், பல்வேறு தரப்பு பிரிவினருக்கும் சேவை வழங்கும். எங்கள் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு தயாரிப்பும் ஒரு கதையைச் சொல்கிறது. இது நம் நாட்டின் வளமான கலாச்சார அம்சத்தைப் பிரதிபலிக்கிறது." என்றார்.

ஓசூரில் அறிமுக விழாவைக் கொண்டாடும் வகையில், தநைரா நிறுவனம் 2024 பிப்ரவரி 19ம் தேதி பிப்ரவரி 23-ம் தேதி வரை ஒரு தங்க நாணயச் சலுகையை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் ரூ. 20,000/- ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கும்போது 0.2 கிராம் தனிஷ்க் தங்க நாணயத்தைப் பெறலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu