ஆழ்வார்குறிச்சியில் மே 30 இல் திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம்

 

ஆழ்வார்குறிச்சியில் திமுக இளைஞரணி சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் 30ந்தேதி நடைபெறுகிறது.  இதில் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.

ஆழ்வார்குறிச்சியில் திமுக இளைஞரணி சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் வருகிற 30ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. ஆழ்வார்குறிச்சி 1வது வார்டு கல்யாணிபுரத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்திற்கு கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமை வகிக்கிறார். அவைத்தலைவர் அல்லாபிச்சை, பேரூர் செயலாளர் அழகேசன், துணை செயலாளர்கள் பாண்டியன், சகுந்தலா, கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் சைலப்பன், சுப்பிரமணியன்,  வார்டு செயலாளர் கண்ணன், பாண்டிநாயுடு முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட  இளைஞரணி சக்தி சுப்பிரமணியன் வரவேற்கிறார். மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன் தொகுப்புரை ஆற்றுகிறார்.

மாநில பேச்சாளர்கள் கம்பம் பாண்டித்துரை, கடையநல்லூர் இஸ்மாயில், மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகசாமி ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர். மாவட்ட கவுன்சிலர்கள் மைதீன்பீவி, கோதர்மைதீன், பேரூர் கவுன்சிலர்கள் நாகூர்மீரா, லதா, சந்திரன், முத்துமாரி, ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்அரசி, ரம்யா ராம்குமார், ஜஹாங்கீர், சங்கர், புஷ்பராணி, ஆவுடைகோமதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். நகர இளைஞரணி கண்ணன் நன்றி கூறுகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu