10,11ஆம் வகுப்பு தேர்வில் ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளி மாணவர்கள் சாதனை

 


10,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வி;ல் ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

இப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய  322 பேரில் 314 பேர் தேர்ச்சி பெற்று, 97.5 சதவீத வெற்றியை பெற்றனர். மாணவி கிருஷ்ணபிரியா 482 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

இதே போல் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 430 தேர்வு எழுதியதில், 416 பேர் தேர்ச்சி பெற்று, 97 சதவீத வெற்றியை பெற்றனர். மாணவன் குமரகுருபரன் 576 மதிப்பெண் பெற்று முதலிடமும், அஸ்வின் பாலா 532 மதிப்பெண் பெற்று 2வது இடமும், ஹலன் பிளஸ்ஸி 526 மதிப்பெண் பெற்று 3வது இடமும் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை  பள்ளி  நிர்வாகி மோயீசன் அடிகள் பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் சே. அந்தோணி அருள் பிரதீப், நிர்வாக அலுவலர் அருள் செல்வராஜ், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu