கடந்த டிசம்பர் 11ம் தேதி சென்னையைச் சேர்ந்த விஜய் என்பவரும் அவரது நண்பரும் சோழிங்கநல்லூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, வழியில் திருநங்கை ஒருவர் அவர்களை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். விஜய் அவரிடம் பணம் இல்லை என்று சொன்னதும் அவரது நண்பர் பர்சை எடுத்துப் பார்த்துள்ளார். அதில் 10 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் 500 ரூபாய் நோட்டுக்களாக இருந்துள்ளது. அதனால் அவர்கள் சில்லறை இல்லை என்று கூறியதும் எவ்வளவுக்கு சில்லறை வேண்டும்? நான் தருகிறேன் என்று சொன்ன திருநங்கை பர்சை எடுத்து 100 ரூபாய் நோட்டுகளை எண்ணியுள்ளார். இதை பார்த்த விஜய்யும் அவரது நண்பரும் இவ்வளவு பணம் உள்ளவர் நம்மிடம் எதற்காக பணம் கேட்க வேண்டும் என்று பணம் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
அதற்கு அந்த திருநங்கை அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பிறகு அங்கிருந்து சென்று அவர்களுக்கு பின்னால் ஐடி கம்பெனியில் வேலை செய்துவிட்டு திரும்பி வந்த பெண்களிடம் பணம் கேட்டுள்ளார். அந்த பெண்களும் பயத்துடன் பணத்தை கொடுத்துள்ளார்கள். அவர்கள் 100 ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது. அதன் பிறகு பக்கத்தில் இருந்த கடைக்கு சென்றும் பணம் கேட்டுள்ளார். கடைக்காரர்களும் வியாபாரத்திற்கு இடைஞ்சல் வரக்கூடாது என்பதால் பணத்தை கொடுத்துள்ளனர்.
இவை அனைத்தையும் பார்த்த விஜய் இந்த சம்பவத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சென்னையில் எங்கு சென்றாலும் இந்த நிலைதான் என்று கூறியிருப்பதுடன், புறநகர் ரயில்களில் பணம் கேட்கும் திருநங்கைகளிடம் 10 ரூபாய் கொடுத்தால் இதை வைத்து என்ன செய்ய... 50 கொடு என்கிறார்க். பணம் இல்லை என்றால் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். இவர்களுக்கு பயந்தே பலர் பணம் கொடுக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு இதுபோன்று அடாவடியில் ஈடுபடும் திருநங்கையர்களை காவல்துறை எச்சரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள செல்வ கணபதி என்பவர், இதை விட கொடுமை! எனது உறவினர் திருமணத்தில் கலந்து மணமகன் மணமகள் ஆகியோர் தலா ₹5000 தர வேண்டும் இல்லை என்றால் எங்கள் சாபத்திற்கு ஆலாக நேரிடும் என சொல்லி பணம் பறித்தார்கள் எல்லா ஊர்களிலும் கல்யாண மண்டபத்தில் இப்படிதான் நடக்கிறது. இதற்கு தமிழக அரசும், தமிழ்நாடு போலீசும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ! தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கும் அவர், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்துள்ளார்.
-விஜி
0 கருத்துகள்